IND vs NZ : அணியின் நலனுக்காக உங்களது 3வது இடத்தை அவருக்கு தியாகம் செய்ங்க – விராட் கோலிக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் கோரிக்கை

Virat Kohli Sanjay Manjrekar
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் வெற்றியுடன் வென்ற இந்தியா அடுத்ததாக வலுவான நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விளையாடுகிறது. அதனால் உலக கோப்பைக்கு தேவையான தரமான வீரர்களை இந்த தொடர்களில் கண்டறிய முயற்சிக்கும் இந்திய அணி நிர்வாகம் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை சோதிக்கும் வேலைகளையும் செய்து வருகிறது.

Ishan-Kishan-2

- Advertisement -

இருப்பினும் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் அதிரடியாக 210 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்த இசான் கிசான் அடுத்ததாக நடைபெற்ற இலங்கைத் தொடர் முழுவதும் ஒரு வாய்ப்பு கூட பெறாமல் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அதனால் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் உலகிலேயே இரட்டை சதமடித்த வீரர் அடுத்த போட்டியில் பெஞ்சில் அமர்வது இந்தியாவில் தான் நடக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தியாகம் செய்ங்க:
இருப்பினும் அவர் விளையாடும் இடத்தில் ரோகித் சர்மாவுடன் வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து பெரிய ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் ஜனவரி 18ஆம் தேதி துவங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையின் அணியின் நலனுக்காக தம்முடைய 3வது இடத்தை சுப்மன் கில்லுக்கு விராட் கோலி கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Ishan Kishan 1

குறிப்பாக 2018 வாக்கில் அம்பாதி ராயுடுவுக்காக அதை ஏற்கனவே செய்துள்ள விராட் கோலி இப்போதும் அதை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் அவ்வாறு செய்தால் இசான் கிசான் தொடக்க வீரராக விளையாடும் வாய்ப்பை பெறுவார் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றிகளில் ஒருவர் மட்டும் மிகவும் ஏமாற்றத்துடன் இருப்பார் என்று நினைக்கிறேன். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு என்னிடம் ஒரு ஐடியா உள்ளது”

- Advertisement -

“3வது இடத்தை சுப்மன் கில்லுக்கு கொடுங்கள் இதற்கு முன் அவர் அந்த இடத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டுள்ளார். அதனால் விராட் கோலி தன்னுடைய 3வது இடத்தை தியாகம் செய்து விட்டு 4வது இடத்தில் விளையாட வேண்டும். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பாக இலங்கைக்கு எதிரான தொடரில் ராயுடுவுக்காக அதை விராட் கோலி செய்துள்ளார். எனவே இந்த தீர்வு இந்த பிரச்சனையை தீர்க்கலாம். குறிப்பாக இரட்டை சதமடித்த இசான் கிசான் இடது கை பேட்ஸ்மேனாக டாப் ஆர்டரில் விளையாடுவது மோசமான ஐடியாவாக இருக்காது”

Sanjay

“அதே சமயம் தற்போது இஷான் கிசான் கொண்டுள்ள பார்மையும் வீணடிக்காமல் நீங்கள் பயன்படுத்தியாக வேண்டும். குறிப்பாக அவரைப் போன்றவர் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பது அடுத்து வரும் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரது வேலையை எளிதாக்கும். அதன் பின் மிடில் ஆர்டரில் யாரை விளையாட வைப்பீர்கள் என்பது எனக்கே புரியவில்லை ஏனெனில். ஏனெனில் தற்போது சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்”

இதையும் படிங்க: IND vs NZ : இந்தியா நியூசிலாந்து தொடரை எந்த சேனலில் கண்டுகளிக்கலாம்? – எத்தனை மணிக்கு துவங்கும்?

“அதே சமயம் அவர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக விளையாட வேண்டும் என்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” என்று கூறினார். இருப்பினும் விராட் கோலி 3வது இடத்தில் விளையாடுவதற்காகவே பிறந்தவர் போன்ற செயல்பாடுகளை கடந்த 15 வருடங்களாக வெளிப்படுத்தி வருவதால் அதில் ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் பதிலளிக்கிறார்கள். மேலும் அதை கேப்டனாக ரோகித் சர்மா செய்யலாமே என்றும் ரசிகர்கள் பதிலளிக்கிறார்கள்.

Advertisement