IND vs NZ : இந்தியா நியூசிலாந்து தொடரை எந்த சேனலில் கண்டுகளிக்கலாம்? – எத்தனை மணிக்கு துவங்கும்?

IND vs NZ
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த அட்டவணை வெளியானதில் இருந்தே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsNZ 1

- Advertisement -

ஏனெனில் சமீபத்தில் இலங்கை அணியை துவம்சம் செய்து அட்டகாசமான ஃபார்மிற்கு திரும்பியுள்ள இந்திய அணியானது நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை தொடரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று ஜனவரி 18-ஆம் தேதி முதல் தூங்குகிறது. அதன்படி இன்று நடைபெற இருக்கும் இந்த முதலாவது போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

starsport

அடுத்ததாக ஜனவரி 21-ஆம் தேதி ராய்ப்பூர் மைதானத்திலும், அதற்கடுத்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது ஜனவரி 24-ஆம் தேதி இந்தூர் மைதானத்திலும் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? எந்தெந்த சேனலில் இந்த போட்டிகளை கண்டு களிக்கலாம் என்பது குறித்த தெளிவான தகவலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

- Advertisement -

அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளுமே இந்திய நேரப்படி மதியம் 1:30 மணியளவில் துவங்குகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் கண்டு களிக்கலாம். அதுமட்டுமின்றி கூடுதலாக டிடி ஸ்போர்ட்ஸ் சேனலிலும் இந்த போட்டிகள் நேரலை செய்யப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs NZ : இந்தியா நியூசிலாந்து ஒருநாள் போட்டிகள் நடைபெறும் தேதி? மற்றும் மைதானம் – முழுவிவரம் இதோ

அதேபோன்று ஆன்லைன் மூலம் இந்த ஒருநாள் தொடரை காண விரும்புவோர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பின் மூலம் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement