IND vs NZ : இந்தியா நியூசிலாந்து ஒருநாள் போட்டிகள் நடைபெறும் தேதி? மற்றும் மைதானம் – முழுவிவரம் இதோ

Umran-Malik
- Advertisement -

இந்திய அணி அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்தோடு அடுத்ததாக தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எந்தெந்த தேதிகளில்? எந்தெந்த மைதானங்களில்? நடைபெறுகிறது என்பது குறித்த தெளிவான தகவலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

INDvsNZ

- Advertisement -

அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது முதலாவதாக தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று ஜனவரி 18-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூர் நகரில் ஜனவரி 21-ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இந்தூர் மைதானத்தில் ஜனவரி 24-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரானது இந்திய நேரப்படி சரியாக மதியம் 1:30 மணி அளவில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக சொந்த மண்ணில் பல்வேறு தொடர்களை சந்திக்க இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்தே உலக கோப்பை அணியை நிர்வாகம் உருவாக்கும் என்பதனால் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் அனைத்து தொடர்களுமே இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று சீனியர் வீரர்களை தவிர்த்து உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டுமெனில் தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திலும் இளம் வீரர்கள் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக எம்எஸ் தோனி படைத்துள்ள 5 அற்புதமான உலக சாதனைகள்

இதன் காரணமாக ஒவ்வொரு தொடரிலும் அவர்கள் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடைபெற இருக்கும் இந்த முதலாவது ஒருநாள் போட்டியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement