CWC 2023 : 2011இல் வாய்ப்பில்லை.. 2023இல் உழைப்பால் உயர்ந்த ரோஹித் – அசாருதீனின் சாதனையை தகர்த்து புதிய சாதனை

Rohit Shama Azaruddin
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஐசிசி தரவரிசையில் டாப் 2 அணிகளாக இருக்கும் இவ்விரு அணிகளில் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டிக்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அந்த நிலைமையில் மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இசான் கிசான் விளையாடுவார் என்று ரோகித் சர்மா அறிவித்தார்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அத்துடன் சென்னை மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஷமிக்கு பதிலாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டு இந்தியா 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. அதை விட இந்த போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் அதிக வயதில் இந்தியாவை வழி நடத்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் சாதனையை தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

இதற்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற 1999 உலகக்கோப்பையில் முகமது அசாருதீன் தம்முடைய 36 வருடம் 124 நாட்களில் இந்தியாவை கேப்டனாக தலைமை தாங்கி அந்த சாதனையை இதுநாள் வரை தன்வசம் வைத்திருந்தார். அந்த நிலையில் தற்போது 36 வருடம் 161 நாட்கள் வயதை கொண்டுள்ள ரோஹித் சர்மா அவரை முந்தி இந்த சாதனையை தம்முடைய அனுபவத்தால் உடைத்துள்ளார்.

- Advertisement -

இதே பட்டியலில் தற்போதைய பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் கடந்த 2007 உலக கோப்பையில் இந்தியாவை 34 வருடம் 71 நாட்களில் கேப்டனாக வழி நடத்தி 3வது இடத்தில் இருக்கிறார். முன்னதாக ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிய ரோகித் சர்மாவுக்கு 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதனால் சூரியன் மீண்டும் உதயமாகும் என்று ட்வீட் போட்ட அவர் அதோடு நிற்காமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தினார்.

இதையும் படிங்க: CWC 2023 : 2011இல் வாய்ப்பில்லை.. 2023இல் உழைப்பால் உயர்ந்த ரோஹித் – அசாருதீனின் சாதனையை தகர்த்து புதிய சாதனை

குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் தோனி துவக்க வீரராக களமிறங்குவதற்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றியில் பங்காற்ற துவங்கிய அவர் நாளடைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தார். அதற்கிடையே 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற காரணத்தால் தற்போது இந்தியாவை வழி நடத்தும் அளவுக்கு ரோகித் சர்மா உழைப்பால் உயர்ந்துள்ளார் என்றால் மிகையாகாது.

Advertisement