என்னோட கரியரின் கடைசி கட்டத்தில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட ஆசைப்பட்டேன் – டேல் ஸ்டெயின் வெளிப்படை

Dale-Steyn
Advertisement

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் கடந்த 2004-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2020-ஆம் ஆண்டு வரை 93 டெஸ்ட் போட்டிகள், 125 ஒருநாள் போட்டிகள் மற்றும் 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 2008-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை 95 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.

உலகளவில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய வீரராக தனது கரியரின் உச்சகட்ட பார்மில் இருக்கும் போது பார்க்கப்பட்ட அவரது பந்துவீச்சுக்கு எதிராக முன்னணி பேட்ஸ்மேன்களும் தடுமாறியதை நாம் பார்த்துள்ளோம்.

- Advertisement -

அதோடு அவரது அதிவேகம் மற்றும் ஸ்விங் என இரண்டிற்கும் கட்டுப்பட முடியாமல் நட்சத்திர வீரர்களும் தடுமாறியதை நாம் கண்டுள்ளோம். அந்த அளவிற்கு தனது அற்புதமான பந்துவீச்சின் மூலம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரராக வலம் வந்த டேல் ஸ்டெயின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஓய்வை அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது கரியரின் கடைசி காலகட்டத்தில் ஒருமுறையாவது சி.எஸ்.கே ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் அவர் தற்போது வெளிப்படையாக ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் என்னுடைய கரியரின் கடைசி கட்டத்தில் இருந்தபோது சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் தோனியின் தலைமையின் கீழ் விளையாடும் அனுபவம் எவ்வாறு இருக்கம் என்பதை உணரவே தான் இப்படி ஒரு ஆசையை வைத்திருந்ததாகவும் ஆனால் அது நிறைவேறாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : சுப்மன் கில் விளையாடவில்லை. பிளேயிங் லெவனை அறிவித்த ரோஹித் சர்மா – சரியான டீம் தான்

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி மும்பை அணியின் சாதனையை சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement