IND vs AUS : சுப்மன் கில் விளையாடவில்லை. பிளேயிங் லெவனை அறிவித்த ரோஹித் சர்மா – சரியான டீம் தான்

Rohit-Gill
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி சற்று முன்னர் கோலாகலமாக துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் பந்துவீசி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது அதிகரித்திருந்தது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் இந்த முதலாவது போட்டியில் இடம் பெறவில்லை என கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துவிட்டார். அதோடு அவருக்கு பதிலாக துவக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் ஆகியோரும் ஆல் ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் விளையாடுகின்றனர். ஏற்கனவே நாம் குறிப்பிட்டது இருந்தது போன்றே சென்னை மைதானத்தில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. அதோடு கூடுதலாக ஹர்திக் பாண்டியாவும் வேகப்பந்து வீச்சாளராக செயல்படுவார் என்பதனால் தற்போது சரியான பலத்துடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

- Advertisement -

அதே வேளையில் ஆஸ்திரேலியா அணியும் தங்களது பேட்டிங் வரிசையை பலப்படுத்தி உள்ளதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 29 பந்துகளில் 10 சிக்ஸ் 13 ஃபோர்ஸ்.. ஏபிடி, கெயில் சாதனையை தூளாக்கிய ஆஸி வீரர்.. மாபெரும் சரவெடி உலக சாதனை

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement