29 பந்துகளில் 10 சிக்ஸ் 13 ஃபோர்ஸ்.. ஏபிடி, கெயில் சாதனையை தூளாக்கிய ஆஸி வீரர்.. மாபெரும் சரவெடி உலக சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி அடிலெய்ட் நகரில் நடைபெற்ற 7வது லீக் போட்டியில் தெற்கு ஆஸ்த்ரேலியா மற்றும் டாஸ்மானியா ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தெற்கு ஆஸ்த்ரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டாஸ்மானியா 50 ஓவர்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 435/9 ரன்கள் குவித்து மிரட்டியது.

அந்த அணிக்கு 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கலெப் ஜூவெல் 90 (52) ரன்களும் வெதரால்ட் 34 (44) ரன்களும் எடுத்தனர். அந்த நல்ல துவக்கத்தை பயன்படுத்தி மிடில் ஆர்டரில் சார்லி வாக்கிம் 48 (37) ரன்களும் சில்க் 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 116 (85) ரன்களும் அடித்தனர். அதே போல லோயர் மிடில் ஆர்டரில் மெக்கலிஸ்டர் 51 (31) வெப்ஸ்டேய் 42 (27) ரன்களும் எடுத்து அசத்திய நிலையில் தெற்கு ஆஸ்த்ரேலியா சார்பில் அதிகபட்சமாக ப்ரெண்டன் டாட்ஜெட் மற்றும் வெஸ் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

- Advertisement -

மாபெரும் உலக சாதனை:
அதை தொடர்ந்து 436 என்ற மெகா இலக்கை துரத்திய தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு விளையாட வேண்டிய கட்டாயத்தில் துவக்க வீரர்கள் ஹென்றி ஹண்ட் மற்றும் ஜாக் பிரேசர்-மெக்குர்க் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அந்த வகையில் 12 ஓவர்களிலேயே 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஒருபுறம் நிதானமாக விளையாடிய ஹண்ட் 51 (47) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுபுறம் டாஸ்மானியா பவுலர்களை பட்டையை கிளப்பிய ஜேக் ப்ரெஷர் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 29 பந்துகளிலேயே 100 ரன்கள் தொட்டார். இதன் வாயிலாக லிஸ்ட் ஏ, முதல் தரம் மற்றும் டி20 என இந்த உலகில் நடைபெறும் அனைத்து வகையான கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன் முதல் தரம் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 31 பந்துகளில் டீ வில்லியர்ஸ் 100 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் 2013 ஐபிஎல் தொடரில் புனேவுக்கு எதிராக பெங்களூரு அணிக்காக கிறிஸ் கெயில் 30 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் மொத்தம் 10 பவுண்டரி 13 சிக்சருடன் 125 (38) ரன்களை 328.95 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: CWC 2023 : ஆரம்பத்துலேயே வேஸ்ட் பண்றிங்க.. முடிஞ்சா அங்க உங்களோட பவர காட்டுங்க.. கோலிக்கு பனேசர் அட்வைஸ்

ஆனாலும் மிடில் ஆர்டரில் டேனியல் ட்ரெவ் 52 (50) நாதன் மெக்ஸ்வீனி 62 (63) ரன்கள் எடுத்தது தவிர்த்து ஏனைய வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 46.4 ஓவரில் தெற்கு ஆஸ்திரேலியா 398 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வென்ற டாஸ்மானியா சார்பில் அதிகபட்சமாக மிச்சல் ஓவன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement