CWC 2023 : ஆரம்பத்துலேயே வேஸ்ட் பண்றிங்க.. முடிஞ்சா அங்க உங்களோட பவர காட்டுங்க.. கோலிக்கு பனேசர் அட்வைஸ்

Monty Panesar
- Advertisement -

கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 2011 போல சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. அதில் சமீபத்திய ஆசிய கோப்பையை வென்று தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உறுதியாக தென்படுகிறது.

ஏனெனில் இந்திய அணியில் ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற காயத்தை சந்தித்த வீரர்கள் முழுமையாக குணமடைந்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார்கள். அதே போல பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அழுத்தமான போட்டிகளிலும் இந்தியாவை தாங்கி பிடிப்பதற்கு தயாராக இருக்கிறார். ஏனெனில் கடந்த 2008இல் அறிமுகமாகி 15 வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் அவர் சச்சினையே மிஞ்சி அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்து 47 சதங்களை விளாசி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

பவர காமிக்காதிங்க:
குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்த அவர் 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக யாராலும் மறக்க முடியாத மகத்தான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அத்துடன் 2023 ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்திய அவர் இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையில் எதிரணிகளுக்கு சவாலாக இருப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

இந்நிலையில் ஐசிசி தொடர்களில் லீக் சுற்றிலேயே விராட் கோலி உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி முடித்து விடுவதாக மான்டி பனேசர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் நாக் அவுட் போன்ற கடைசிக்கட்ட அழுத்தமான போட்டிகளில் அவர் ஏமாற்றத்தை கொடுப்பதாகவும் பனேசர் தெரிவித்துள்ளார். எனவே ஆரம்பத்தை விட கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்படுங்கள் என்று விராட் கோலியை கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி இருப்பது நிச்சயமாக இந்திய அணியில் பெரிய பலமாக இருக்கும். ஏனெனில் பேட்டிங், ரன்னிங் போன்ற பல வகைகளிலும் அவர் இந்திய அணியில் ட்ரெண்ட்டை உருவாக்குபவராக இருக்கிறார். குறிப்பாக களத்தில் அவர் ஆக்ரோசமாக செயல்படுகிறார். மேலும் மொத்த அணியையும் பிடிக்கும் அவர் இது தான் வெற்றிக்கான தருணம் இதை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் அணி வீரர்களை தனது வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுக்கப்போகிறாரா? விராட் கோலி – உண்மை விவரம் இதோ

“அவர் சரியான சமயத்தில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துவதை நான் பார்க்க விரும்புகிறேன். அதாவது கடந்த டி20 உலக கோப்பையில் அவர் முன்கூட்டியே உச்சகட்டத்தை தொட்டு விட்டார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அவர் ஃபைனலுக்கு நிகரான ஆட்டத்தை விளையாடினார். இம்முறை அவர் அதை ஆரம்பத்தில் சேமித்து ஃபைனல் அல்லது செமி ஃபைனல் போன்ற போட்டிகளில் வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement