IND vs AUS : மார்ட்டின் கப்டிலின் சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா.. ஒருநாள் கிரிக்கெட்டில் தனித்துவ மாஸ் உலக சாதனை

Rohit Sharma Guptill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3வது போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. மறுபுறம் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முறைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பட் கமின்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் திரும்பினார்கள்.

அந்த நிலைமையில் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 352/7 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் 56, மிட்சேல் மார்ஷ் 96, ஸ்டீவ் ஸ்மித் 74, மார்னஸ் லபுஸ்ஷேன் 72 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவித்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அதன் காரணமாக 400 ரன்கள் குவிப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பையும் ஆஸ்திரேலியா பெற்றது.

- Advertisement -

ஹிட்மேன் உலக சாதனை:
ஆனால் மிடில் ஓவர்களில் அலெக்ஸ் கேரி 11, கிளன் மேக்ஸ்வெல் 5, கேமரூன் கிரீன் 9 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி 400 ரன்களை தொடவிடாமல் செய்த இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 353 என்ற கடினமான இடத்தை துரத்திய இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் ஆச்சரியப்படும் வகையில் துவக்க வீரராக களமிறங்கினார்.

குறிப்பாக கில், இசான் கிசான் ஆகிய இருவருமே ஓய்வெடுத்ததால் அந்த வாய்ப்பைப் பெற்ற போதிலும் அவர் தடுமாற்றமாகவே பேட்டிங் செய்த நிலையில் எதிர்புறம் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக சிக்சர்களை பறக்க விட்டு தனது ஸ்டைலில் விளையாடினார். அதிலும் குறிப்பாக மிட்சேல் ஸ்டார்க் வீசிய பந்துகளில் அசால்ட்டான சிக்சரை அடித்த அவர் மொத்தம் 5 சிக்ஸரை பறக்க விட்டு வெறும் 31 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார்.

- Advertisement -

அதை விட இந்த 5 சிக்ஸர்களையும் சேர்த்து இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் மட்டும் இதுவரை ரோகித் சர்மா 257 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற நியூசிலாந்தின் மார்டின் கப்டில் சாதனையை உடைத்த அவர் மாபெரும் புதிய தனித்துவமான உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 257*, இந்திய மண்ணில்
2. மார்ட்டின் கப்டில் : 256, நியூசிலாந்து மண்ணில்
3. ப்ரெண்டன் மெக்கல்லம் : 230, நியூசிலாந்து மண்ணில்
4. கிறிஸ் கெயில் : 228, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில்
5. எம்எஸ் தோனி : 186, இந்திய மண்ணில்

இதையும் படிங்க: வீடியோ : வெயிலால் ஓய்வெடுத்த ஸ்மித், லபுஸ்ஷேன் முன்.. எஸ்ஜே சூர்யா போல உல்லாச ஆட்டம் போட்ட கிங் கோலி.. ரசிகர்கள் சிரிப்பு

அதனால் சற்று முன் வரை இந்தியா 17 ஓவர்களில் 106/1 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி வெற்றிக்கு போராடி வருகிறார்.

Advertisement