வெயிலால் ஓய்வெடுத்த ஸ்மித், லபுஸ்ஷேன் முன்.. எஸ்ஜே சூர்யா போல உல்லாச ஆட்டம் போட்ட கிங் கோலி.. ரசிகர்கள் சிரிப்பு

Virat Kohli Dance
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் நகரில் மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது. அதில் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இந்திய அணியில் கில், பாண்டியா போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு காரணமாக விளையாடவில்லை.

மறுபுறம் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முறைப்படும் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பட் கமின்ஸ், கிளன் மேக்ஸ்வெல், மிட்சேல் ஸ்டார்க் ஆகிய 3 முக்கிய வீரர்கள் திரும்பினார்கள். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி 352/7 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

விராட் கோலியின் சேட்டை:
அந்த அணிக்கு டேவிட் வார்னர் 56, மிட்சேல் மார்ஷ் 96, ஸ்டீவ் ஸ்மித் 74, மார்னஸ் லபுஸ்ஷேன் என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அலெக்ஸ் கேரி 11, மேக்ஸ்வெல் 5, கேமரூன் கிரீன் 9 ரன்களில் அவுட்டாக்கி 400 ரன்களை ரன்களை தொடவிடாமல் செய்த இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்களும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

முன்னதாக இந்த போட்டி நடைபெற்ற ராஜ்கோட் மைதானத்தில் மதிய நேரத்தில் அதிகப்படியான வெப்பம் இருந்ததால் 28 ஓவர்களிலேயே வீரர்களுக்கு தண்ணீர் இடைவெளி விடப்பட்டது. அப்போது அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாத நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய அணி வீரர்களை நாற்காலி எடுத்து வரச் சொல்லி அதில் உட்கார்ந்து சில நிமிடங்கள் ஓய்வெடுத்தார்.

- Advertisement -

அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் அவருக்கு தலையில் ஐஸ் பேக் வைத்து வெப்பத்தைத் தணித்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் களத்தில் இருந்து மற்றொரு வீரர் லபுஸ்ஷேனும் தண்ணீர் குடிப்பதற்காக வந்தார். ஆனால் அப்போது அங்கே சென்ற விராட் கோலி லபுஸ்ஷேனிடம் ஏதோ சொல்லிக்கொண்டே திடீரென நைட் கிளப்பில் ஆடுவது போல ஒரு சில நொடிகள் உல்லாசமான நடனத்தை ஆடினார்.

குறிப்பாக சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி தமிழ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா போன்ற நடிகை முன் எஸ்ஜே சூர்யா ஆடியதை போன்ற நடனத்தின் சாம்பிளை விராட் கோலி ஆடிக்கொண்டே லபுஸ்ஷேன் வயிற்றிலும் விரலால் 2 குத்து குத்தி ஜாலியாக பேசியது ரசிகர்களை சிரிக்க வைத்தது. பொதுவாகவே விக்கெட் விழுந்தால் கூட அதை வெறித்தனமாக கொண்டாடக்கூடிய விராட் கோலி அவ்வப்போது ஜாலியாக இது போன்ற சேட்டைகளையும் செய்யும் குணத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement