IND vs AFG : கபில் தேவின் 40 வருட சரவெடி சாதனை காலி.. சச்சினை மிஞ்சி உ.கோ அரசனாக ரோஹித் உலக சாதனை

Rohit Sharma Record
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 272/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாஹிதி மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடி 80 ரன்களும் ஓமர்சாய் 62 ரன்களும் குவித்து அசத்திய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

ஹிட்மேன் சாதனை:
குறிப்பாக ஒருபுறம் இசான் கிசான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா வெறும் 30 பந்துகளில் 50 ரன்கள் கடந்து அதிரடியாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல கொஞ்சம் கூட அதிரடியை குறைக்காமல் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் வெறும் 63 பந்துகளில் 100 ரன்கள் கடந்தார்.

இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் 40 வருட ஆல் டைம் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா புதிய சரித்திர சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில் தேவ் 72 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததே இது நாள் வரை சாதனையாக இருந்தது.

- Advertisement -

அது போக கடந்த 2015 உலகக்கோப்பையில் 1 சதமடித்த 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்ததை அனைவரும் அறிவோம். அந்த நிலையில் இந்த சதத்தையும் சேர்த்து மொத்தம் 7 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சரித்திர உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1992 – 2011 காலகட்டங்களில் 6 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: CWC 2023 : ஜாம்பவான்கள் சச்சின், கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்த ஹிட்மேன் ரோஹித் – 2 சரித்திர சரவெடி உலக சாதனை

இது போக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் (555*) அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் (553) உலக சாதனை உடைத்த அவர் உலகக் கோப்பையில் வேகமாக 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார்.

Advertisement