CWC 2023 : ஜாம்பவான்கள் சச்சின், கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்த ஹிட்மேன் ரோஹித் – 2 சரித்திர சரவெடி உலக சாதனை

- Advertisement -

பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. மதியம் 2 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 272/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 21, இப்ராஹிம் ஜான் ராஹில் ஷா என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 63/3 என்ற தடுமாற்ற துவக்கத்தை பெற்றாலும் மிடில் ஆர்டரில் 4வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஓமர்சாய் 62 ரன்களும் கேப்டன் ஷாஹிதி 80 ரன்களும் எடுத்து சரிவை சரி செய்தார்கள்.

- Advertisement -

ஆனாலும் கடைசி 10 ஓவர்களில் முகமது நபி 19, நஜிபுல்லா ஜாட்ரான் 2, ரசித் கான் 16 என அதிரடி வீரர்களை குறைந்த ரன்களில் அவுட்டாகி 300 ரன்கள் தொடவிடாத அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 273 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் இம்முறை சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

குறிப்பாக இசான் கிசான் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் அவருக்கும் சேர்த்து ரோகித் சர்மா அதிரடியாக ஆப்கானிஸ்தான் பவுலர்களை எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தார். அந்த வகையில் 30 பந்துகளிலேயே அதிரடியாக விளையாடி 50 ரன்கள் தொட்ட அவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்தார்.

- Advertisement -

அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் வேகமாக 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற டேவிட் வார்னரின் உலக சாதனையையும் அவர் சமன் செய்தார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ரோகித் சர்மா/டேவிட் வார்னர் : தலா 19
2. சச்சின் டெண்டுல்கர்/ஏபி டீ வில்லியர்ஸ் : தலா 20
3. சௌரவ் கங்குலி/விவ் ரிச்சர்ட்ஸ் : தலா 21

அதை விட அதிரடியாக 3 சிக்சர்களையும் அடித்த அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து மாபெரும் புதிய உலக சாதனையை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 554*
2. கிறிஸ் கெயில் : 553
3. ஷாஹித் அப்ரிடி : 476

Advertisement