10000 ரன்கள் தொடுவதில் சச்சின், கோலி செய்யாத சரித்திரம் படைத்த ரோஹித் சர்மா – ஹாசிம் அம்லாவின் உலக சாதனையும் தகர்ப்பு

Rohit Sharma 10000
Advertisement

ஆசியா கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சவாலான மைதானத்தில் சற்று தடுமாற்றமாக செயல்பட்டு 49.1 ஓவரில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 53 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக இளம் வீரர் துணித் வெல்லலேக் 5 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 214 ரன்களை துரத்திய இலங்கைக்கு பதும் நிசாங்கா 6, கருணரத்னே 2, குசால் மெண்டிஸ் 15, அசலங்கா 22 என முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் கேள்விக்குறியான அந்த அணியின் வெற்றிக்கு 7வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய தனஞ்ஜெயா டீ சில்வா 41 ரன்கள் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அவரை விட மறுபுறம் பவுலிங் போலவே பேட்டிங்கிலும் போராடிய வெல்லலேக் 42* ரன்கள் எடுத்த நிலையில் எதிர்புறம் வந்த பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய இந்தியா 41.3 ஓவர்களில் இலங்கையை 172 ரன்களுக்கு சுருட்டி பெரிய வெற்றியை பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதனால் நேற்று பாகிஸ்தானை தோற்கடித்திருந்த இந்தியா இந்த வெற்றியும் சேர்த்து சூப்பர் 4 சுற்றில் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளை பெற்று முதல் அணியாக தகுதி பெற்றது. இந்த வெற்றிக்கு பவுலர்கள் முக்கிய பங்காற்றினாலும் சவாலான பிட்ச்சில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 53 (48) ரன்கள் எடுத்து 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிப்பதற்கு மிகவும் முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அதிவேகமாக அடித்த 2வது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை உடைத்த அவர் அந்த மைல்கள் ரன்களை கௌசன் ரஜிதா வீசிய 7வது ஓவரின் 4வது பந்தில் நேராக அட்டகாசமான சிக்சரை விளாசி தொட்டார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சிக்ஸருடன் 10000 ரன்களை தொட்ட முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ரோகித் சர்மா படித்துள்ளார்.

ஏனெனில் இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, விராட் கோலி எம்எஸ் தோனி ஆகியோர் தங்களுடைய 10000வது ரன்னை சிங்கிள் அல்லது டபுள் ரன்கள் எடுத்து தான் தொட்டனர். அத்துடன் உலக அளவில் கிறிஸ் கெயில், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் 10000 ரன்களை சிக்ஸருடன் தொட்ட 3வது வீரர் என்ற சாதனையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 20 வயதிலேயே முரளிதரனின் வரலாற்று சாதனை சமன் – கபில் தேவின் தனித்துவ உலக சாதனையும் சமன் செய்த வெல்லாலகே

அது போக இந்த 10000 ரன்களில் 8000 ரன்களை துவக்க வீரராக அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 8000 ரன்கள் குவித்த தொடக்க வீரர் என்ற தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா சாதனையை உடைத்து புதிய உலக சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ரோஹித் சர்மா : 160*
2. ஹாசிம் அம்லா : 173
3. சச்சின் டெண்டுல்கர் : 179
4. சௌரவ் கங்குலி : 208
5. கிறிஸ் கெயில் : 209

Advertisement