20 வயதிலேயே முரளிதரனின் வரலாற்று சாதனை சமன் – கபில் தேவின் தனித்துவ உலக சாதனையும் சமன் செய்த வெல்லாலகே

Dunith Wellalage 4
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்தியா தடுமாற்றமாக செயல்பட்டு 49.1 ஓவரில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 53 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக துணித் வெல்லலேக் 5 விக்கெட்டுகளையும் சரித் அசலங்கா 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 214 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 6, கருணரத்னே 2, குசால் மெண்டிஸ் 17 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 99/6 என சரிந்த இலங்கையின் வெற்றி கேள்விக்குறியான போது 7வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய தனஞ்செயா டீ சில்வா 41 (66) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement -

20 வயதிலேயே சாதனை:
அவரை விட மறுபுறம் பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் போராடிய வெல்லலேக் 42* ரன்கள் எடுத்து சவாலை கொடுத்தார். ஆனால் அவரை நிற்க வைத்துவிட்டு எதிர்புறம் வந்த வீரர்களை வந்தவாக்கிலேயே திருப்பிய இந்தியா 41.3 ஓவரிலேயே இலங்கையை 172 ரன்களுக்கு சுருட்டி சிறப்பான வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதனால் இத்தொடரின் ஃபைனலுக்கு முதல் அணியாக இந்தியா பெற்று அசத்தியுள்ளது. ஆனால் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் 60 வயதிலேயே பேட்டிங் பவுலிங் துறைகளில் அபாரமாக செயல்பட்ட துணித் வெல்லலேக் திறமையை பாராட்டு வகையில் ஆட்டநாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் பந்து வீச்சில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி, ராகுல், ஹர்திக் பாண்டியா போன்ற 5 இந்திய தரமான வீரர்களை 20 வருடம் 246 நாட்களில் அவுட்டாக்கிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த இலங்கை பவுலர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் முன்னாள் வீரர் சரிதா புத்திகா 21 வருடம் 65 நாட்களில் 5 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் வலுவான இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், அகிலா தனஞ்செயா ஆகியோரின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். அதை விட இப்போட்டியில் 42* ரன்கள் 5 விக்கெட்டுகளை எடுத்து அவர் 2 கேட்சுகளையும் பிடித்தார்.

இதையும் படிங்க: 20 வயது தான்.. கிங் கோலி, ஹிட்மேன் ரோகித், கில் என வரிசை கட்டிய 5 விக்கெட்.. யார் இந்த துணித் வெல்லாலகே?

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 40+ ரன்கள் 5+ விக்கெட்கள் மற்றும் 2 கேட்ச்களை பிடித்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் கபில் தேவ் உலக சாதனையையும் அவர் வெறும் 20 வயதிலேயே சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 1983ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் 40+ ரன்கள் 5 விக்கெட்கள் 2 கேட்ச்களை பிடித்து அந்த சாதனையை முதல் வீரராக படைத்துள்ளார். ஆனால் அந்த 2 போட்டிகளிலுமே அவர்கள் விளையாடிய அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement