இலங்கை மண்ணின் கில்லியாக கிறிஸ் கெயில் சாதனையை தூளாக்கிய ரோஹித் சர்மா – ஷாஹித் அப்ரிடியின் ஆல் டைம் சாதனையும் சமன்

Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வரும் சூப்பர் 4 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏற்கனவே இத்தொடரின் லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இப்போட்டி எப்படியாவது நடைபெற வேண்டும் என்று கருதும் ஆசிய கவுன்சில் அதற்காக செப்டம்பர் 11ம் தேதி ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். அதிலும் கடந்த போட்டியில் புதிய பந்தை ஸ்விங் செய்து பெரிய அச்சுறுத்தலை கொடுத்த சாகின் அப்ரிடியை மிகச்சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்த போது ரோகித் சர்மா 59 (46) ரன்களும் சுப்மன் கில் 58 (52) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

ஹிட்மேன் சிக்ஸர் சாதனைகள்:
அதைத்தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 24.1 ஓவரில் 147/2 ரன்கள் எடுத்திருந்த போது வந்த மழை போட்டியை ரத்து செய்தது. முன்னதாக இப்போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா கடந்த போட்டியில் கிளீன் போல்ட்டாக்கிய சாகின் அப்ரடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார்.

அதே போல பாகிஸ்தான் துணை. கேப்டன் சடாப் கான் வீசிய 13வது ஓவரில் 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்து அசத்திய அவர் மொத்தம் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்தார். அந்த வகையில் இப்போட்டியில் அடித்த 4 சிக்ஸர்களையும் சேர்த்து 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியின் ஆல் டைம் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஷாஹித் அப்ரிடி : 26 (21 இன்னிங்ஸ்)
1. ரோஹித் சர்மா : 26* (24 இன்னிங்ஸ
2. சனாத் ஜெயசூர்யா : 23 (24 இன்னிங்ஸ்)
3. சுரேஷ் ரெய்னா : 18 (13 இன்னிங்ஸ்)

- Advertisement -

அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கை மண்ணில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற கிறிஸ் கெயில் படைத்திருந்த சாதனையும் உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 33*
2. கிறிஸ் கெயில் : 30
2. ஷேன் வாட்சன் : 30
3. ஷாஹித் அப்ரிடி : 29
4. சுரேஷ் ரெய்னா : 25

இதையும் படிங்க: IND vs PAK : என்னங்க இவரு.. இவரு பண்றதெல்லாம் பாத்தா பாபர் அசாமே கடுப்பாயிடுவாரு – முகமது ரிஸ்வானின் சேட்டை

இந்த நிலைமையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை (553) உடைக்க 539 சிக்ஸர்களுடன் 2வது இடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவுக்கு இன்னும் 15 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement