IND vs PAK : என்னங்க இவரு.. இவரு பண்றதெல்லாம் பாத்தா பாபர் அசாமே கடுப்பாயிடுவாரு – முகமது ரிஸ்வானின் சேட்டை

Mohammed-Rizwan
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் போர் சுற்றின் முக்கிய போட்டியானது மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் செப்டம்பர் 11-ஆம் தேதி ரிசர்வ் டே-வில் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் டே போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி மழை குறுக்கீடு வரை இந்திய அணி 24.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 56 ரன்களையும், சுப்மன் 58 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

அதேபோன்று விராட் கோலி 8 ரன்களுடனும், கே.எல் ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆரம்ப கட்டத்தில் இந்திய அணியின் வீரர்களை பதட்டமடைய செய்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முகமது ரிஸ்வான் செய்த செயல் பாபர் அசாமையே கடுப்பாக்கும் அளவிற்கு இருந்ததாக ரசிகர்கள் அவரது செயலை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் எப்பொழுதுமே முகமது ரிஸ்வான் பந்தை பிடித்து விட்டாலே விக்கெட் கேட்டு செலிப்ரேஷன் செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர். அதிலும் இன்றைய போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் அடிக்க முயற்சித்து விடும் பந்துகளை எல்லாம் விக்கெட் கேட்டு அம்பயரையே வெறுப்பேற்றினார் என்றே கூறலாம்.

- Advertisement -

பந்து ஸ்விங் ஆகி தனது கைக்கு வரும்போது எல்லாம் அவுட்? அவுட்? என்று நிறைய முறை அம்பயரிடம் அப்பீல் செய்தார். அதேபோன்று ரோகித் சர்மா பேட்டிங்கிங் செய்யும் போது நசீம் ஷா வீசிய பந்து ஸ்விங் ஆகி வந்த போது கூட பந்து எட்ஜ்ஜாகியது என்று பாபர் அசாமை ரிவ்யூ எடுக்க சொன்னார். ஆனால் ரீப்ளேவில் பந்து பேட்டில் படவே இல்லை என்பது தெரிந்தது அதனால் ஒரு ரிவ்யூவை பாகிஸ்தான் அணி இழந்தது.

இதையும் படிங்க : போட்டியை நடத்த வேற லெவல் ஐடியாவுடன் இந்தியாவுக்கே டஃப் கொடுத்த இலங்கை மைதான பராமரிப்பாளர்கள் – அஸ்வின் பாராட்டு

இருப்பினும் அதனைத் தொடர்ந்தும் அடுத்த பல ஓவர்களில் தான் பிடிக்கும் பந்துகளில் எல்லாம் அப்பீல் செய்து கொண்டிருந்தார். அவரது இந்த செயலை கண்ட வர்ணனையாளர் வாசிம் அக்ரம் கூட முகமது ரிஸ்வான் இப்படி எல்லா பந்துக்கும் விக்கெட் விக்கெட் என கொண்டாடுவது பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல அணியின் கேப்டன் பாபர் அசாமுக்குமே கஷ்டமாக இருக்கும் என்று கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement