போட்டியை நடத்த வேற லெவல் ஐடியாவுடன் இந்தியாவுக்கே டஃப் கொடுத்த இலங்கை மைதான பராமரிப்பாளர்கள் – அஸ்வின் பாராட்டு

- Advertisement -

இலங்கையின் கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே இத்தொடரில் இவ்விரு அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இம்முறை ரிசர்வ் நாள் கடை பிடிக்கப்படும் என்று ஆசிய கவுன்சில் ஆரம்பத்திலேயே அறிவித்தது. அந்த நிலைமையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்திருந்த போது அந்த மழை போட்டியை மீண்டும் ரத்து செய்ய வைத்துள்ளது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குறிப்பாக கடந்த போட்டியில் அச்சுறுத்தலை கொடுத்த சாகின் அதிரடியை இம்முறை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடிய அவர்களில் ரோஹித் சர்மா 56 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
அதை தொடர்ந்து கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் பேட்டிங் செய்த போது வந்த மழை போட்டியை ரத்து செய்ததால் பாதியில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்த மழை மைதானத்தை தண்ணீரால் நிரப்பி விட்டு சென்றதால் மீண்டும் போட்டியை துவக்குவதற்கு கொழும்பு மைதான பராமரிப்பாளர்கள் பெரிய வேலையை செய்ய நேரிட்டது.

குறிப்பாக ரோலர் வாயிலாக பெரும்பாலான தண்ணீர் உறிஞ்சப்பட்ட போதிலும் மைதானத்தில் சற்று பள்ளமான பகுதிகளில் அதிக ஈரமாக இருந்தது. அதை சரி செய்ய உறிஞ்சிகளை பயன்படுத்திய மைதான பராமரிப்பாளர்கள் தண்ணீரை முடிந்தளவுக்கு முழுவதுமாக நீக்கினார்கள். அத்துடன் முக்கியமான பிட்ச் பகுதிகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தும் அதிக ஈரமாக இருந்ததால் அதை சரி செய்வதற்கு 3 ராட்சத காற்றாடிகள் அடங்கிய வண்டியை கொண்டு வந்து ஈரப்பதத்தை கொழும்பு மைதானம் பராமரிப்பாளர்கள் சரி செய்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

சொல்லப்போனால் இதற்கு முன் இந்தியாவில் இது போல் மழை பெய்த போட்டிகளில் ஈரத்தை உலர்த்துவதற்காக ஹேர் டிரையர் மற்றும் ஸ்பான்ஞ் போன்ற வித்தியாசமான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்திய மைதான பராமரிப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கொழும்பு மைதான பராமரிப்பாளர்கள் காற்றாடிகளை ஏற்கனவே தயாராக செய்து வைத்திருந்து மழை வந்ததும் ஈரத்தை உலர்த்தும் முயற்சியில் ஈடுபட்டது இதற்கு முன் ரசிகர்கள் பார்க்காததாகவும் தனித்துவமாகவும் இருந்தது.

அதை பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த திட்டம் மிகவும் புதுமையாக இருப்பதாக ட்விட்டரில் பாராட்டியுள்ளார். மேலும் ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்காக நன்றியையும் தாண்டிய வேலைகளை தொடர்ச்சியாக செய்து வரும் மைதான பராமரிப்பாளர்களுக்கு அவர் ஸ்பெஷல் பாராட்டுகளையும் கொடுத்தார். ஆனால் அவ்வளவு முயற்சிகள் செய்தும் மீண்டும் அ
வந்த மழை போட்டியை நிறுத்திய நிலையில் நாளையாவது வழிவிடுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

Advertisement