மோர்கன், ஏபிடி சாதனைகளை தூளாக்கிய ஹிட்மேன் ரோஹித் சர்மா.. புதிய 2 உலக சாதனை

Rohit Sharma Record
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற 45வது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் ஏற்கனவே நெதர்லாந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய நிலைமையில் ஆறுதல் வெற்றியை பெறுவதற்காக வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது.

மறுபுறம் ஏற்கனவே செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக தங்களின் ஒரு சில குறைகளையும் திருத்திக்கொள்ளும் முனைப்புடன் இப்போட்டியில் களமிறங்கியது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

ரோஹித்தின் உலக சாதனை:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் நெதர்லாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக தங்களை சேர்த்தனர். குறிப்பாக பெரிய அணிகளையே அசால்டாக அடித்து நொறுக்கிய இந்த ஜோடி நெதர்லாந்து பவுலிங் அட்டாக்கை மிகவும் எளிதாக எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அதில் கில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 51 (32) ரன்களில் அவுட்டானலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரோகித் சர்மா 8 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதம் கடந்தார். இந்த 2 சிக்சரையும் சேர்த்து 2023 ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 60* சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஏபி டீ வில்லியர்ஸ் 58 சிக்சர்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும். அது போக 2023 உலகக்கோப்பையில் மட்டும் ரோஹித் சர்மா இது வரை மொத்தம் 24* சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற இங்கிலாந்தின் இயன் மோர்கன் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: மோர்கன், ஏபிடி சாதனைகளை தூளாக்கிய ஹிட்மேன் ரோஹித் சர்மா.. புதிய 2 உலக சாதனை

இதற்கு முன் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் கேப்டனாக இயன் மோர்கன் 22 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் மொத்தம் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 61 (54) ரன்கள் குவித்து அதே சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து ரோஹித் ஆட்டமிழந்தார். அதனால் சற்று முன் வரை இந்தியா 18 ஓவரில் 130/2 ரன்கள் எடுத்துள்ள நிலையில் களத்தில் விராட் கோலி விளையாடி வருகிறார்.

Advertisement