- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின், விராட் கோலி, கங்குலி, டிராவிட் வரிசையில் 5 ஆவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய – மாபெரும் சாதனை

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதலாவது போட்டியில் ரன் அவுட்டாகி வெளியேறிய ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 39 பந்துகளை சந்தித்து 48 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை அளித்திருந்தார்.

5 ஆவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை :

அவரது இந்த அதிரடியான இன்னிங்ஸ்சின் மூலம் ஐந்தாவது இந்திய வீரராக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு மாபெரும் சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டவது ஒருநாள் போட்டியில் 39 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 123 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 48 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவர் அடித்த இந்த 48 ரன்களின் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மொத்தமாக 356 போட்டிகளில் விளையாடி 14038 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் 37 சதங்கள் அடங்கும்.

இந்த லிஸ்ட் ஏ கிரிக்கெட் என்பது சர்வதேச ஒருநாள் போட்டிகள், டொமஸ்டிக் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஸ்டேட் லெவல் ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றை சேர்த்து கணக்கிடப்படுவதாகும். இந்த பட்டியலில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 21,999 ரன்களுடன் முதலிடத்திலும், அவருக்கு அடுத்து விராட் கோலி 16,447 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : கம்பீரை தூக்கிட்டு இந்த பதவிக்கு தோனியை கொண்டு வாங்க.. அதுதான் கரெக்ட்டா இருக்கும் – ஸ்ரீசாந்த் அதிரடி

அதற்கடுத்து சவுரவ் கங்குலி 15,622 உங்களுடன் மூன்றாவது இடத்திலும், ராகுல் டிராவிட் 15,271 ரன்களுடன் நான்காவது இடத்திலும் இருக்கும் வேளையில் தற்போது ஐந்தாவது வீரராக ரோஹித் சர்மா 14,000 ரன்களை பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -