இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகியதை அடுத்து புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ போட்டியின்றி தேர்வு செய்தது. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி வெள்ளை பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2006 டி20 உலக கோப்பை என ஒயிட் பால் போட்டிகளில் மிகச் சிறப்பாக இந்திய அணி வெற்றி நடை போட்டு வருகிறது.
கம்பீரை நீக்கிவிட்டு தோனியை கொண்டு வாருங்கள் : ஸ்ரீசாந்த் கருத்து
ஆனால் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை சொந்த மண்ணில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அதற்கடுத்து தென்னாப்பிரிக்க அணியிடமும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இப்படி டிரஸ் போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக இம்முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
இந்நிலையில் இந்திய அணி இப்படி டெஸ்ட் போட்டிகளில் பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருவதற்கு காரணம் கௌதம் கம்பீர் தான் என்றும் அவரைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அணியின் ஆலோசகராக தோனியை கொண்டு வர வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீசாந்த் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளர் தேவையில்லை ஆலோசகர் தான் தேவை. ஒரு சகோதரனைப் போல ஆலோசகர் இருக்க வேண்டும். தோனியை பொறுத்தவரை வீரர்களிடம் எப்போதும் அழுத்தத்தை காண்பித்தது கிடையாது. ஆனால் கௌதம் கம்பீர் வெற்றி பெறும்போது சிரிப்பதும், தோற்கும் போதும் கோபப்படுவதும் என்று இருந்து வருகிறார்.
இதையும் படிங்க : இப்போவே இஷான் கிஷனுக்கு அந்த விசா ரெடின்னு நினைக்குறேன்.. சுனில் கவாஸ்கர் பாராட்டு – விவரம் இதோ
அது நம்முடைய அணிக்கு சரியாக இருக்காது எனவே கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஆலோசகராக தோனியை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். 2026 டி20 உலககோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முழு காரணமும் கம்பீரை சேராது என்றும் வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கு காரணம் என்றும் ஸ்ரீசாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



