
ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக பும்ராவும் அறிவிக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அதன் காரணமாக துணை கேப்டனான பும்ரா முதல் போட்டிக்கான இந்திய அணியை வழி நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தனது இரண்டாவது குழந்தை பிறப்பிற்காகத்தான் ரோஹித் சர்மா இந்தியாவிலே தங்கிவிட்டார் என்பதும் அதன் பின்னர் எஞ்சியுள்ள தொடருக்கான இந்திய அணியுடன் அவர் இணைவார் என்றும் கூறப்பட்டது. அந்த வகையிலேயே தற்போது ரோகித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தையும் பிறந்து அந்த மகிழ்ச்சியான தகவல் வெளியாகியது.
அதோடு குழந்தை பிறந்த சில தினங்களிலேயே ஆஸ்திரேலியா வந்தடைந்துள்ள ரோகித் சர்மா பெர்த் நகரில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விளையாட மறுத்த ரோகித் சர்மாவை இந்த தொடரில் கேப்டனாக அவர்கள் விளையாட வைக்கக்கூடாது என்றும் துவக்க வீரருக்கான இடத்தை அவருக்கு கொடுக்ககூடாது என்றும் பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது இருந்தன.
ஆனால் அவர் ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னதாக இந்தியாவிலேயே இருந்து நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசி வந்தது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தனது இரண்டாவது குழந்தைக்காக அவர் காத்திருந்த வேளையிலும் :
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் எந்த வகையான செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்? அணி தேர்வு எவ்வாறு இருக்க வேண்டும்? எப்படி அந்த சூழலில் விளையாட வேண்டும்? என்பது குறித்து பல்வேறு தகவல்களை ஜூம் மீட்டிங்கின் மூலம் தொடர்ந்து நிர்வாகத்துடன் கலந்துரையாடி உள்ளார். அது தவிர்த்து முதல் போட்டிக்கான திட்டங்களையும் ஒரு கேப்டனாக அவர் நிர்வாகத்திடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
இதையும் படிங்க : பெர்த் நகருக்கு வந்தடைந்த ரோஹித் சர்மா.. மேட்ச் பார்த்த கொஞ்ச நேரத்துலே எடுத்த – அதிரடி முடிவு
இப்படி இந்தியாவில் தனது குழந்தைக்காக காத்திருந்தாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்காக மும்பையில் இருந்தபடியே அவர் கொடுத்த அவர் ஆலோசனைகள் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதன் மூலம் இந்திய அணிக்காக அவர் எப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கிறார் என்பது இந்து தகவலின் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.