பெர்த் நகருக்கு வந்தடைந்த ரோஹித் சர்மா.. மேட்ச் பார்த்த கொஞ்ச நேரத்துலே எடுத்த – அதிரடி முடிவு

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த நவம்பர் 22-ஆம் தேதி துவங்கி நான்காம் நாளான இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி சென்றுவிட்டது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சுமாராக ஆரம்பித்தாலும் அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி பலமாக திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா வந்தடைந்த ரோஹித் சர்மா :

முன்னதாக இந்த முதல் போட்டிக்கு முன்னர் ரோகித் சர்மா தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் காரணமாகவே இந்தியாவிலேயே தங்கிவிட்டதால் அவருக்கு பதிலாக பும்ரா தலைமையில் இந்த டெஸ்டில் இந்திய அணி பங்கேற்று மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது பெர்த் நகருக்கு வந்து ஓய்வறையில் கம்பீருடன் அமர்ந்து இந்த போட்டியை கண்டுகளித்தார். அதோடு இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் பத்து நாட்கள் ஓய்வு இருக்கும் வேளையில் இரண்டாவது போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் அந்த போட்டிக்கு தயாராகும் விதமாக சில மணி நேரங்கள் மைதானத்தில் இருந்து போட்டியை கண்டு களித்த ரோஹித் அதன்பினர் நேரடியாக வலைப்பயிற்சி மைதானத்திற்கு சென்று அங்கு பிங்க் நிற பந்தில் பயிற்சி செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவள் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

எனவே இரண்டாவது போட்டியில் முக்கிய சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரரான கே.எல் ராகுல் மீண்டும் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்குவார்.

இதையும் படிங்க : 120 கி.மீ பவுலர் செஞ்ச சாதனை தெரியுமா? வாயை விட்டு வினய் குமாரிடம் வாங்கிக் கட்டிய மஞ்ரேக்கர்

மேலும் தற்போது ஆறாவது இடத்தில் விளையாடி வரும் துருவ் ஜுரேல் வெளியேற்றப்பட்டு அந்த இடத்தில் ராகுல் விளையாடுவார் என்று தெரிகிறது. இப்படி ரோகித் சர்மா ஆஸ்திரேலியா வந்தடைந்ததும் உடனே பயிற்சி செய்ய வேண்டும் என்ற முடிவு எடுத்தது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement