120 கி.மீ பவுலர் செஞ்ச சாதனை தெரியுமா? வாயை விட்டு வினய் குமாரிடம் வாங்கிக் கட்டிய மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் அவ்வப்போது அதிரடியான சர்ச்சையான கருத்துக்களை தெரிவிப்பது வழக்கமாகும். அந்த வகையில் அடிக்கடி காயத்தை சந்திப்பதால் முகமது ஷமி 2025 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போக மாட்டார் என்று அவர் விமர்சித்தார். அதற்கு என்னுடைய வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை பாருங்கள் என்ற வகையில் ஷமி அவருக்கு கடுமையான பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் சஞ்சய் மஞ்ரேக்கர் வர்ணனையாளராக செயல்பட்டார். அந்தப் போட்டியில் மூன்றாவது நாளில் மித வேகப்பந்து வீச்சாளர்கள் பிட்ச்சில் புற்கள் இருப்பதை பயன்படுத்தி விக்கெட்டுகள் எடுப்பதை பற்றி அவர் பேசினார். குறிப்பாக முன்னாள் இந்திய வீரர் வினய் குமாரை எடுத்துக்காட்டாக வைத்து அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

வாயை விட்ட மஞ்ரேக்கர்:

“வினய் குமார் போன்ற மிக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த அவ மரியாதையும் இல்லை. அவர்களுக்கு பிட்ச்சில் கொஞ்சம் புற்கள் தேவை. அது போன்ற ஆடுகளங்களில் அவர்கள் பந்தை 120 கிலோமீட்டர் வேகத்தில் சரியான இடத்தில் வீசி விக்கெட்டுகளை எடுப்பார்கள். அதனாலேயே அவரைப் போன்றவர்கள் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மேலே இருக்கிறார்கள்” என்று கூறினார்.

அதாவது 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பவுலர்கள் பிட்ச்சில் புற்கள் இருந்தால் மட்டுமே விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்ற வகையில் அவர் குறைத்து பேசினார். அதைக் கேட்ட வினய் குமார் அவருக்கு ஷமியை போலவே ட்விட்டரில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி வினய் குமார் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சஞ்சய் பாய் மரியாதையுடன் உங்களுடைய வேக துப்பாக்கிக்கு அவசர சர்வீஸ் தேவை”

- Advertisement -

சரியான பதிலடி:

“120 கிலோமீட்டர் என்று உண்மையாக சொல்கிறீர்களா? கடவுளின் அருளால் நான் செய்த சாதனைகளுக்காக பெருமையை எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் செய்த விஷயங்களுக்காக நான் திருப்தியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வினய் குமார் போன்ற மிக வேகப்பந்து வீச்சாளர்கள் கடினமாக உழைத்து ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பவுலராக சாதனை படைத்தார்”

இதையும் படிங்க: 10 வருடம்.. வாழ்க்கை ஒரு வட்டம்.. நான் வளர காரணமே அவங்க தான்.. சிஎஸ்கே வாங்கியது பற்றி அஸ்வின்

“மேலும் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் நாட்டுக்காக அவர் விளையாடினார். எனவே என்னுடைய பந்து வீச்சுக்காக நான் பெருமை அடைகிறேன். எப்படி இருந்தாலும் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்” என்று கூறினார். அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா, ஷமி வரிசையில் வினய் குமாரிடமும் சஞ்சய் தேவையின்றி வாயை விட்டு வாங்கி கட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement