10 வருடம்.. வாழ்க்கை ஒரு வட்டம்.. நான் வளர காரணமே அவங்க தான்.. சிஎஸ்கே வாங்கியது பற்றி அஸ்வின்

Ashwin CSK
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் 24ஆம் தேதி துவங்கியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடிக்கு வாங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் சென்னையைச் சேர்ந்த அவர் 2009 முதல் சிஎஸ்கே அணிக்காக தோனி தலைமையில் விளையாடி 2010, 2011 வருடங்களில் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதே காரணத்தால் சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை அவருக்கு தோனியில் வழங்கினார். அந்த வாய்ப்பில் நன்றாக விளையாடிய அஸ்வின் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்து 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி வின்னராக சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவரை மீண்டும் சென்னை வாங்கியுள்ளதை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.

- Advertisement -

வாழ்க்கை வட்டம்:

இந்நிலையில் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை இந்த ஏலம் நிரூபித்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி சென்னை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்கள். சிஎஸ்கே அணிக்காக 2008 – 2015 வரை நான் விளையாடினேன். அதற்காக அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்”

“சிஎஸ்கே அணியில் கற்றுக் கொண்ட விஷயங்கள் தான் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இந்தளவுக்கு நான் செல்வதற்கு முக்கிய காரணமாகும். சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடி 10 வருடங்கள் ஆகிறது. சென்னை என்னை இந்த விலையில் வாங்கியதெல்லாம் வேறு கதை. ஆனால் அவர்கள் என்னை மீண்டும் வாங்கியுள்ளதால் பழைய நினைவுகள் எனக்கு வருகிறது”

- Advertisement -

சிஎஸ்கே ரசிகர்கள்:

“2011 ஏலத்திலும் இதே போல என்னை சிஎஸ்கே அணி வாங்குவதற்காக கடுமையாக போட்டியிட்டார்கள். அந்த நினைவு தற்போது மீண்டும் வந்தது ஸ்பெஷல் உணர்வு. அன்புடன் ரசிகர்கள் என்ற நிறைய பேனர்களை நான் பார்த்தேன். ராஜஸ்தான் அணிக்காக சென்னையில் விளையாடிய போது நான் பவுலிங் அல்லது பேட்டிங் செய்கையில் சிஎஸ்கே ரசிகர்கள் எனக்காக எந்த ஆதரவும் கொடுக்கவில்லை”

இதையும் படிங்க: அப்படியே சச்சினை பார்த்த மாதிரியே இருந்தது.. ஜெய்ஸ்வாலை பாராட்டிய டேரன் லீமன் – ஏன் தெரியுமா?

“அப்படிப்பட்ட ஆர்வமான ரசிகர்களுக்காக சிஎஸ்கே அணிக்காக மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி. அந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாட காத்திருக்கிறேன். ருதுராஜ் தலைமையில் எம்எஸ் தோனியுடன் விளையாடுவதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். அஸ்வின் மட்டுமின்றி முதல் நாளில் டேவோன் கான்வே, நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் போன்ற வீரர்களையும் சென்னை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement