இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே குவித்தது.
ரொம்ப அருமையா விளையாடுறாரு ஜெய்ஸ்வால் :
ஆனால் அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேரத்தில் :
6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களையும், விராட் கோலி 100 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.
இந்நிலையில் இளம்வீரரான ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை பாராட்டி பேசியுள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளரான டேரன் லீமன் கூறுகையில் : ஜெய்ஸ்வால் பெரிய சதம் அடித்து இந்தியாவை மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவருக்கு கிடைக்கும் பாராட்டுக்களுக்கு நிச்சயம் அவர் தகுதியானவர்தான்.
ஏனெனில் 18 வயதில் சச்சின் இதே மைதானத்தில் வந்து எங்களை ஆச்சரியப்படுத்தி ஒரு மிகப்பெரிய சதம் ஒன்றை அடித்து அசத்தியிருந்தார். அதேபோன்று தற்போது ஜெய்ஸ்வால் இங்கு வந்து அற்புதமான சதத்தை பதிவு செய்துள்ளார். அவருக்கு வெவ்வேறு ஷாட்டுகளை விளையாட நேரம் இருக்கிறது. எனவே ஒரு பந்திற்கு மூன்று அல்லது நான்கு ஷாட்டுகளை அவரால் விளையாட முடிகிறது.
இதையும் படிங்க : பார்த்து வளர்ந்த மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிரா இதை செஞ்சு சொன்னது மகிழ்ச்சி.. ஜெய்ஸ்வால் பேட்டி
இந்த இன்னிங்ஸில் அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். முதல் இன்னிங்ஸ்சின் போது தடுமாற்றத்தை சந்தித்திருந்தாலும் அதனை உடனடியாக திருத்தி சிறப்பாக விளையாடியுள்ள அவர் வருங்காலத்திலும் நிறைய சாதனைகளை முறியடிப்பார் என லீமன் பேசியது குறிப்பிடத்தக்கது.



