வங்கதேச அணிக்கெதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – டாசுக்கு பிறகு அறிவித்த ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இம்முறை முழுக்க முழுக்க இந்தியாவில் இந்த தொடரானது நடைபெற்று வருவதால் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் கூறியவரும் வேளையில் இந்திய அணியும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் என மூன்று அணிகளுக்கு எதிராகவும் அசத்தலான வெற்றி பெற்ற இந்திய அணியானது இன்று தங்களது நான்காவது லீக் போட்டியில் அக்டோபர் 19-ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் இந்திய அணியும், இந்திய அணியை வீழ்த்தி அடுத்த வெற்றியை பெற வங்கதேச அணியும் முனைப்பு காட்டும் என்பதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதுல்.

அந்த வகையில் புனே மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்டு முடிந்தது. டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளதால் தற்போது இந்திய அணி பந்துவீச தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் இந்திய அணி விளையாடும் என்று ரோஹித் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் அஸ்வின் ஆகிய அனுபவ வீரர்கள் இருந்தும் தொடர்ச்சியாக ஷர்துல் தாகூர் மீது ரோஹித் நம்பிக்கை அளித்து வாய்ப்பினை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்றைய வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அப்செட்லாம் மேட்டரே கிடையாது.. அதை ஃபாலோ பண்ணி யாரையும் விடாதீங்க.. இங்கிலாந்துக்கு மெக்கல்லம் அட்வைஸ்

1) சுப்மன் கில், 2) ரோஹித் சர்மா, 3) விராட் கோலி, 4) ஸ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) பும்ரா, 11)) முகமது சிராஜ்.

Advertisement