அப்செட்லாம் மேட்டரே கிடையாது.. அதை ஃபாலோ பண்ணி யாரையும் விடாதீங்க.. இங்கிலாந்துக்கு மெக்கல்லம் அட்வைஸ்

- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து, இந்தியா போன்ற அணிகள் தங்களுடைய ஆரம்பக்கட்ட போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது. ஆனால் வலுவான நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து தங்களுடைய முதல் 3 போட்டிகளில் 2 தோல்விகளை பதிவு செய்து தடுமாற்றமாக செயல்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

ஏனெனில் 2015 உலகக்கோப்பையில் வங்கதேசத்திடம் தடுமாறிய அந்த அணி அதன் பின் இயன் மோர்கன் தலைமையில் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை பின்பற்றி 2019 உலகக்கோப்பையை சொந்த மண்ணில் வென்றது. மேலும் மோர்கன் விடைபெற்ற பின் ஜோஸ் பட்லர் தலைமையில் 2022 டி20 உலக கோப்பையை வென்ற அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர்களாக கருதப்படுகின்றனர்.

- Advertisement -

மெக்கல்லம் ஆதரவு:
அதனால் இத்தொடரில் எதிரணிகளை அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் சரியான அடி வாங்கியது. அதை விட அசால்டாக 400 ரன்களை அடிக்கும் அணியாக கருதப்படும் இங்கிலாந்து கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 285 ரன்களை துரத்த முடியாமல் முதல் முறையாக படுதோல்வியை சந்தித்தது.

இதனால் அந்த அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது போன்ற அப்செட் தோல்விகள் கிடைப்பது சகஜம் தான் என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் அசராமல் அடுத்து வரும் போட்டிகளில் உங்களின் உண்மையான பலமான அதிரடி ஸ்டைலை பின்பற்றி எதிரணியை அடித்து நொறுக்குங்கள் என்றும் இங்கிலாந்துக்கு அவர் ஆலோசனை கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி மிரர் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் தங்களுடைய அதிரடியான அணுகுமுறை மற்றும் பாணியில் தொடர்ந்து உண்மையாக இருக்க வேண்டும். அது தான் அவர்களுக்கு இவ்வளவு வெற்றிகளை கொடுத்தது. எனவே ஒரு மோசமான நாளில் அது அசைக்கப்படக்கூடாது. இந்த சமயத்தில் 3 – 0 என்று வெற்றி பெற்றிருப்பதை இங்கிலாந்து அணியினர் விரும்புவார்கள். ஆனால் விளையாட்டு உங்களுக்கு அப்படி செயல்படாது. சில நேரங்களில் நீங்கள் சவால்களை சமாளித்து பின்னர் எவ்வளவு தரமானவர் என்பதை காட்ட வேண்டும்”

இதையும் படிங்க: ஒன்னுமே இல்லாத பிட்ச்ல கூட அசத்துவாரு.. அவருக்கு பதிலா அஷ்வினை கொண்டு வாங்க.. கவாஸ்கர் கோரிக்கை

“இங்கிலாந்து தரமாக இருப்பதாலேயே கடந்த 2 உலகக் கோப்பைகளை வென்றது. பொதுவாக உலகக் கோப்பையில் இது போன்ற தோல்விகள் வரத்தான் செய்யும். எடுத்துக்காட்டாக வலுவான தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நெதர்லாந்து எதிர்பாராத முடிவை காட்டியதை பாருங்கள். மேலும் இந்தியாவில் எஞ்சிய டாப் 9 அணிகளுக்கு எதிராக உலகக்கோப்பையில் எளிதாக வெற்றி பெற முடியாது. எனவே அவர்களின் சிறந்த செயல்பாடுகளை விரைவில் பார்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement