ஒன்னுமே இல்லாத பிட்ச்ல கூட அசத்துவாரு.. அவருக்கு பதிலா அஷ்வினை கொண்டு வாங்க.. கவாஸ்கர் கோரிக்கை

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும் 17வது லீக் போட்டியில் வலுவான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மதியம் 2 மணிக்கு துவங்கும் அந்த போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து இந்தியா 4வது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே வலுவான ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் எப்போதுமே வலுவாகவே கருதப்படுகிறது. அதனால் இந்த போட்டியில் சற்று பலவீனமான வங்கதேசத்திற்கு எதிராக முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து அஸ்வின், ஷமி போன்ற கடந்த போட்டிகளில் விளையாடாத நட்சத்திரங்களை வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

கவாஸ்கர் கோரிக்கை:
குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வினுக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் இப்போட்டி நடைபெறும் புனே மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

மேலும் வெற்றி நடை போட்டு வரும் 11 பேர் அணியை மாற்ற விரும்பவில்லை என்று நேற்று பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்பின்னர்களுக்கு கை கொடுக்காத பிட்ச்களில் கூட சிறப்பாக செயல்படும் திறமையைக் கொண்டுள்ள அஸ்வின் இப்போட்டியில் விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அஸ்வின் எப்போதும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மட்டும் சிறப்பாக செயல்பட கூடியவர் அல்ல. டாப் பவுலரான அவர் வலது கை வீரர்களுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படக் கூடியவர். குறிப்பாக மகத்தான பவுலரான அவர் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாத பிட்ச்களில் கூட நன்றாக வேலை செய்யக்கூடியவர். எனவே அவருக்கு இந்த போட்டியில் ஒரு அரிதான வாய்ப்பு வழங்கப்படும் என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க:

“அது நடப்பதற்கான சாத்தியமும் இருக்கிறது. குறிப்பாக ஷார்துல் தாக்கூர் போன்றவருக்கு ஓய்வு கொடுத்து வங்கதேச அணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை கருத்தில் கொண்டு அஸ்வினுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்கலாம். மேலும் இந்திய அணி தற்போது விளையாடும் விதத்தில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது அவர்கள் முனைப்பு மற்றும் அச்சமற்ற தன்மையுடன் செயல்பட்டு வருகிறார்கள் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement