மீண்டும் சதமடிக்க கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட ரோஹித் சர்மா – விரக்தியில் என்ன பண்ணீருக்காரு பாருங்க

ROhit Sharma 80
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் டாமினிக்கா நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அந்த நிலைமையில் ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியில் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மீண்டும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 288/4 ரன்கள் குவித்து வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது.

கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் ஆரம்பத்திலேயே எதிரணி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா – யசஸ்வி ஜெய்ஸ்வால் 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடியாக சாதனை படைத்தனர். அதில் ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 57 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சுப்மன் கில் 10 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

ரோஹித்தின் கோபம்:
அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 80 ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்த துணை கேப்டன் ரகானே மீண்டும் 8 ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் கடந்த போட்டியில் பவுண்டரி அடிப்பதற்கே திணறிய விராட் கோலி இம்முறை கொஞ்சமும் தடுமாறாமல் சிறப்பாக பேட்டிங் செய்து அரை சதம் விளாசி 87* ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் முடிவில் ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு 36* ரன்கள் எடுத்து இந்தியாவை வலுப்படுத்தி வருகிறார்.

முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய சதமடித்து 103 ரன்கள் குவித்த ரோகித் சர்மா இந்த போட்டியிலும் அதே போல ஃபுல் ஷாட்களால் 2 சிக்ஸர்களை விளாசி 9 பவுண்டரிகளை பறக்க விட்டு நல்ல துவக்கத்தை பெற்றதால் சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஜோமேல் வேரிக்கன் வீசிய 39வது ஓவரின் 5வது பந்தை முன்னோக்கி சென்று தடுக்க முயற்சித்த அவர் அதைத் தவற விட்டு கிளீன் போல்ட்டானார். குறிப்பாக பந்து தரையில் பட்ட பின் திடீரென லேசாக சுழன்று ரோகித் சர்மாவின் தடுப்பாட்ட லைனை உடைத்து ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது.

- Advertisement -

அப்படி தம்முடைய தடுப்பையும் தாண்டி அவுட்டான விரக்தியில் ஏமாற்றத்துடன் பெவிலியனை நோக்கி நடையை கட்டிய ரோகித் சர்மா கோபத்தில் பேட்டை தரையில் அடிக்காத குறையாக விளாசி விரக்தியை வெளிப்படுத்திக் கொண்டே சென்றார். குறிப்பாக ஹிட்மேன் என்று கொண்டாடப்படும் அவர் கடந்த சில வருடங்களாகவே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

போதாகுறைக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பின் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராகவே செயல்பட்டு தோல்வியை பதிவு செய்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் அஷ்வினை தேர்வு செய்யாமல் சொதப்பியது மிகப்பெரிய தோல்வியை பரிசாக கிடைத்தது.

- Advertisement -

அதனால் பதவி விலக வேண்டுமென நிறைய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் சதமடித்தால் தன் மீதான விமர்சனங்களுக்கு முழுமையான பதிலடி கொடுத்து ஃபார்முக்கு திரும்பலாம் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட அவர் எந்த இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடம் கொடுக்காமல் நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க:IND vs WI : ஜேக் காலிஸை மிஞ்சி வரலாறு படைத்த கிங் கோலி – 500வது போட்டியில் வேறு யாரும் படைக்காத தனித்துவ உலக சாதனை

ஆனாலும் வேரிக்கன் வீசிய தரமான சுழலில் அவுட்டாகி தொடர்ச்சியாக 2வது சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட காரணத்தாலேயே அவர் இந்தளவுக்கு கோபத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். முன்னதாக முக்கிய போட்டிகளில் அடிக்காமல் பலவீனமான வெஸ்ட் இண்டீஸை அடித்து துவைத்து முதல் போட்டியில் சதமடித்த போதே அவரை இந்திய ரசிகர்களே கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement