IND vs WI : மீண்டும் வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த ஜெய்ஸ்வால் – ரோஹித் ஜோடி புதிய சாதனை, விவரம் இதோ

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. மறுபுறம் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் இரண்டரை நாட்களில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜூலை 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ட்ரினிடாட் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே ஆல் அவுட்டாவதை தவிர்க்க முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இந்தியா சார்பில் காயமடைந்த சர்துள் தாக்கூருக்கு பதிலாக முகேஷ் குமார் சேர்க்கப்படுவதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். மேலும் இது வரலாற்றில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

- Advertisement -

சாதனை ஜோடி:
அதை நினைவு கொள்ளும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சிறப்பு பரிசளித்து கௌரவித்தார். அதே போல இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த போட்டியில் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடும் 4வது இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின், தோனி, டிராவிட் ஆகியோருக்கு பின் படைத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் யசஸ்வி ஆகியோர் ஆரம்பத்திலேயே நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஆனால் டாஸ் வென்று பந்து வீச்சை தீர்மானித்ததற்கேற்றார் போல் செயல்படாத வெஸ்ட் இண்டீஸ் சுமாராக பவுலிங் செய்தது. அதை பயன்படுத்திய ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து நேரம் செல்ல செல்ல விரைவாக ரன்களை குவிக்க துவங்கினர். குறிப்பாக ஜெய்ஸ்வால் ஒருபுறம் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஆளாக அரை சதமடித்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் அதன் பின் ரோகித் சர்மா மெதுவாக விளையாடிய நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்து 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். அதன் காரணமாக முதல் நாள் உணவு இடைவெளியில் 121/0 ரன்கள் எடுத்துள்ள இந்தியாவுக்கு களத்தில் ரோகித் சர்மா 63* (102) ஜெய்ஸ்வால் 52* (56) ரன்களுடன் உள்ளனர். முன்னதாக கடந்த போட்டியில் 229 ரன்கள் குவித்த இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி மற்றும் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி ஆகிய இரட்டை வரலாற்று சாதனைகளை படைத்தது.

அந்த நிலையில் இப்போட்டியிலும் 121 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி என்ற மற்றுமொரு சாதனையும் படைத்துள்ளனர்.

இதையும் படிங்க:IND vs WI : மீண்டும் வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த ஜெய்ஸ்வால் – ரோஹித் ஜோடி புதிய சாதனை, விவரம் இதோ

இதற்கு முன் விரேந்திர் சேவாக் – வாசிம் ஜாஃபர் போன்ற இந்திய ஓப்பனிங் ஜோடிகள் அதிகபட்சமாக ஒரு போட்டியில் மட்டுமே 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ஆனால் இந்த தொடரில் முதல் முறையாக இணைந்த ரோகித் – ஜெய்ஸ்வால் முதல் சேர்க்கையிலேயே அதற்குள் 3 சரித்திர சாதனைகள் படைத்து அசத்தி வருகின்றனர்.

Advertisement