துபே ஆடனும்.. 2024 டி20 உலகக் கோப்பையில் அந்த 2 பேரை ஓப்பனிங்கில் இறங்குங்க.. கங்குலி மாஸ் ஐடியா

Sourav Ganguly
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் தற்போது நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ள வீரர்கள் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

அது போன்ற சூழ்நிலையில் சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் சிவம் துபே இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக் போன்றவர்கள் சமீபத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே போல காயத்திலிருந்து குணமடைந்து அசத்தி வரும் ரிஷப் பண்ட், ரிங்கு சிங், ரியன் பராக் போன்ற இளம் வீரர்களும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

- Advertisement -

கங்குலி ஐடியா:
இதற்கிடையே சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் மெதுவாக விளையாடும் ஸ்டைலை கொண்ட விராட் கோலியை கழற்றி விட தேர்வுக் குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகிறது. அதற்கு இந்தியா உலகக் கோப்பையை வெல்ல விராட் கோலி கண்டிப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்ப்புகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் விராட் கோலி 40 பந்தில் 100 ரன்கள் குவிக்கும் திறமையுடையவர் என சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.

எனவே 2024 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் அவர் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்றும் கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார். அத்துடன் அதிரடியான சிக்சர்களைப் பறக்க விடக்கூடிய சிவம் துபே போன்ற நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக பயமின்றி விளையாடுவது முக்கியமாகும்”

- Advertisement -

“டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர்கள் தான் விளையாட வேண்டும் என்ற எந்த விதிமுறையும் கிடையாது. ஜேம்ஸ் ஆண்டர்சன் இப்போதும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 ஓவர்கள் வீசுகிறார். எம்.எஸ். தோனி 40 வயதிலும் சிக்ஸர்களை அடிக்கிறார். விராட் கோலியிடம் 40 பந்துகளில் சதமடிக்கும் திறமை இருக்கிறது. எனவே டி20 கிரிக்கெட்டில் வெற்றி என்பது பயமின்றி சுதந்திரமாக விளையாடுவதை பொறுத்ததாகும்”

இதையும் படிங்க: ஐபிஎல் அதிரடியை அதிகமா பாத்து புளிச்சு போச்சு.. ப்ளீஸ் இதை மாத்துங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

“இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓப்பனிங்கில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக்கும். இந்தியா களத்திற்கு சென்று அடிக்க வேண்டும். ரோகித், விராட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் அற்புதமான திறமையும் சிக்ஸர்களை அடிக்கும் தன்மையையும் கொண்டவர்கள்” என்று கூறினார்.

Advertisement