ரஹானே, புஜாரா ஆகியோரது இடத்தை நிரப்ப இவர்தான் தகுதியானவர் – கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படை

Rohit Press
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டபோது இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த அவர்களை சீனியர் வீரர்களாக இருந்தாலும் இந்திய அணியின் நிர்வாகம் இத்தொடரை கழட்டி விட்டது. மேலும் அவர்களின் இடத்திற்கு இளம் வீரர்கள் பலர் காத்திருப்பதால் இளம் வீரர்களை களமிறக்கி அந்த இடத்தை நிரப்ப வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

INDvsSL cup

- Advertisement -

இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் புஜாரா மற்றும் ரஹானேவின் இடத்தில் விஹாரியையும், ஷ்ரேயாஸ் ஐயரையும் விளையாட வைத்தனர். இந்திய நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் நடைபெற்று முடிந்துள்ள இந்த இலங்கை தொடரில் விகாரி மற்றும் ஷ்ரேயாஸ் ஆகிய இருவருமே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் பின்வரிசையில் ரஹானேவின் இடத்தில் களமிறங்கி பேட்ஸ்மேன்களோடு மட்டுமல்லாமல் பந்து வீச்சாளர்களுடனும் கூட்டணி அமைத்து ரன் சேர்த்த விதம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது.

பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்கள் மட்டுமே குவித்தாலும் அதில் 92 ரன்களை தனியாளாக குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் பலரது பாராட்டையும் பெற்றார். அவர் சதத்தை தவறவிட்ட இருந்தாலும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் பெரிய வரவேற்ப்பை பெற்றது. அதோடு மட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சிலும் 67 ரன்கள் குவித்த அவர் பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

shreyas iyer 3

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஷ்ரேயாஸ் ஐயரை வெகுவாக பாராட்டி இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி20 தொடரின் மூன்று போட்டிகளிலுமே ஒருமுறைகூட ஆட்டமிழக்காமல் தனது அற்புதமான வெளிக்காட்டிய அவர் இந்த டெஸ்ட் தொடரிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

நிச்சயம் அவருக்கு புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரது இடத்தை நிரப்ப வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து வைத்திருப்பார். இதன் காரணமாகவே அவரால் சிறப்பாக விளையாட முடிகிறது. மேலும் அவர் நிரப்பப் போகும் அந்த இடம் மிகப் பெரிய இடம் என்பதனால் நிச்சயம் அவரிடம் நாங்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொடரில் அவரது ஆட்டத்தை நாம் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.

இதையும் படிங்க : நாளுக்கு நாள் இவரோட பேட்டிங் வேறலெவல் ஆகிட்டு இருக்கு. இவரால டீமுக்கு பெரிய ஸ்ட்ரென்த் – ரோஹித் புகழாரம்

அந்த அளவிற்கு அவர் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். போட்டியின் சூழ்நிலையை மிகச்சரியாக கணித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என ஷ்ரேயாஸ் ஐயரை ரோஹித் சர்மா மனதார பாராட்டி உள்ளார். இதன் காரணமாக ரகானேவிற்கு மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் தொடர்வார் என்று கூறலாம்.

Advertisement