நாளுக்கு நாள் இவரோட பேட்டிங் வேறலெவல் ஆகிட்டு இருக்கு. இவரால டீமுக்கு பெரிய ஸ்ட்ரென்த் – ரோஹித் புகழாரம்

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களிலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல ரன் குவிப்பை வழங்கியது. இறுதியில் 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

INDvsSL cup

- Advertisement -

ஆனால் இலங்கை அணியால் 208 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அது மட்டுமின்றி 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஷ்ரேயாஸ் ஐயரும், தொடர் நாயகனாக ரிஷப் பண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா குறித்து அவர் கூறுகையில் :

jadeja

ஒரு அணியாகவும் தனிப்பட்ட முறையிலும் நான் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை மிகவும் சிறப்பாக பார்க்கிறேன். ஏனெனில் அவர் பல்வேறு விடயங்களை அவரது திறன் மூலம் சாதித்து காட்டுகிறார். மேலும் அவர் பேட்டிங் செய்வதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் நாளுக்கு நாள் அவருடைய பேட்டிங் ஸ்ட்ரென்த் கூடிக்கொண்டே வருகிறது.

- Advertisement -

அவர் எப்போது பேட் செய்ய வந்தாலும் தன்னால் முடிந்த வரை சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து தருகிறார், அவரின் இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக தற்போது இந்திய அணியின் 7-ஆம் இடத்தில் கூட நல்ல வலுவான பேட்டிங் உள்ளது. மேலும் பேட்டிங் மட்டுமின்றி அவர் ஒரு முழு பேக்கேஜ் ஆகவே அணியில் இருக்கிறார்.

இதையும் படிங்க : தேவையா இது! சுவரை எகிறி குதித்து வசமாக சிக்கிய 4 இந்திய ரசிகர்கள் – போலீஸ் கேஸ் பாய்ந்தது

அவரால் சிறப்பாக பந்து வீச முடிகிறது. சிறப்பாக பீல்டிங் செய்ய முடிகிறது. இப்படி அனைத்து திறமைகளையும் கொண்ட வீரராக ஜடேஜா இருப்பது இந்திய அணிக்கு பலம் தான் என்று ரவீந்திர ஜடேஜாவை ரோஹித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement