டக் அவுட்டானதும் தலையை தொங்கபோட்ட சுப்மன் கில்.. அதற்கு ரோஹித் கொடுத்த ரியாக்ஷன் – நடந்தது என்ன?

Rohit-and-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதியான இன்று ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 110 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது மூன்றாவது வீரராக களமிறங்கிய சுப்மன் கில் ஆட்டமிழந்த போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கோபமடைந்த விடயம் இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் இன்றைய போட்டியின் போது துவக்க வீரராக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போட்டியின் ஆரம்பத்திலேயே 10 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனால் இந்திய அணி 22 ரன்களுக்கே முதல் விக்க்கெட்டை பறிகொடுத்தது. அதனால் அடுத்து வந்த சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார்.

அதேபோன்று சுப்மன் கில்லும் நிதானமாக ஆடவேண்டும் என எதிர்முனையில் இருந்து சில அறிவுரைகளையும் வழங்கினார். ஆனால் களத்திற்கு வந்த முதல் பந்தில் இருந்தே தடுமாற்றத்தை சந்தித்த சுப்மன் கில் மார்க் வுட் வீசிய பந்தை தடுக்க நினைத்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்த இன்னிங்ஸில் 9 பந்துகளை சந்தித்த அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் ஏமாற்றத்துடன் தலையை தொங்க போட்டபடி வெளியே நடக்க ஆரம்பித்தார். அதனைப் பார்த்த ரோகித் சர்மாவும் அவரிடம் என்ன அறிவுரை கூறுவது என்று தெரியாமல் முகத்தை திருப்பிக் கொண்டு கோபத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க தவறிய சுப்மன் கில் இந்த இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலும் தடுமாற்றத்தை சந்தித்திருந்தார்.

இதையும் படிங்க : 33/3 டூ 237/4.. கேப்டனுடன் சேர்ந்து சொந்த ஊரில் ஹீரோவாக இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா.. அசத்திய சர்பராஸ்

ஆனால் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து எப்படியோ அணியில் நீடிக்கும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து நிச்சயம் இந்த மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியில் வழக்கம் போலவே தனது சொதப்பலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளது நெட்டிசன்கள் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement