விராட் கோலியை விட அதை சரியா கையாளும்.. ரோஹித் தான் சிறந்த கேப்டன்.. பாண்டிங் கருத்து

Ricky Ponting
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலியாவை போராடி தோற்கடித்த இந்தியா 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தி 3வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை தெறிக்க விட்டு 8வது முறையாக சாதனை வெற்றி பெற்றது.

அந்த வகையில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் 2011 போல இம்முறை சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. அத்துடன் இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

சிறந்த கேப்டன்:
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளை எளிதாக்கி வருகிறார். அதனால் 2019இல் கேப்டனாக விராட் கோலியால் தொட முடியாத உலகக்கோப்பையை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றது போல் இம்முறை ரோகித் சர்மா இந்தியாவுக்கு பெற்றுக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலியை விட கேப்டன்ஷிப் செய்வதில் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை அழுத்தம் நெருங்க விடாத அளவுக்கு பார்த்துக்கொள்ளும் ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இருப்பதாக ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா மிகவும் அமைதியாக இருக்கிறார். அவர் செய்யும் எல்லாவற்றிலும் மிகவும் பின்தங்கியவர். அதை அவர் விளையாடும் விதத்தில் கூட பார்க்கலாம்”

- Advertisement -

“குறிப்பாக பேட்டிங்கில் அழகாக விளையாடும் அவர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பார். ஏனெனில் ஒரு கட்டத்தில் அழுத்தம் அணிக்கு வராது அல்லது அது பாதிப்பை ஏற்படுத்தாது என்று உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனெனில் அது தான் போட்டியின் மகத்தான தன்மையாகும். ஆனால் அவர் அதையும் யாரையும் சமாளிப்பார். விராட் போன்ற ஒருவர் சற்று அதிக இதயத்துடன் இருப்பவர். ரசிகர்களின் பேச்சை கேட்டு ரசிகர்களுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாக விளையாடுவார்”

இதையும் படிங்க: நீங்க இப்படி ஆடுனா நம்ம டீம் எப்படி ஜெயிக்கும். பாபர் அசாம் செய்த தவற சுட்டிக்காட்டி – ஷாஹித் அப்ரிடி காட்டம்

“இருப்பினும் அதேபோன்ற ஒரு பர்சனாலிட்டியை கொண்ட ஒருவர் கேப்டன்ஷிப் அழுத்தத்தை சமாளிப்பதை சற்று கடினமாக கருதலாம். ஆனால் ரோகித் சர்மா அதில் நன்றாக இருக்கிறார். குறிப்பாக நல்ல மனிதராகவும் சிறந்த வீரராகவும் அவர் நீண்ட காலமாக இந்தியாவுக்கு செயல்பட்டு வருகிறார். தற்சமயத்தில் அவர் இந்தியாவின் கேப்டனாக சிறந்து வேலையை செய்து வருகிறார்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement