IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய அணி இந்த பிளானை யூஸ் பண்ணா நல்லாயிருக்கும் – விவரம் இதோ

Chepauk
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அக்டோபர் 8-ஆம் தேதி நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள வேளையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே இங்கு வந்து தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியை இந்திய அணி வெற்றியுடன் துவங்க வேண்டும் என்பதற்காக சில திட்டங்களையும் கைவசம் வைத்திருக்கிறது. அதோடு துவக்க வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறங்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டுமெனில் மைதானத்தின் சூழலுக்கு ஏற்ப மூன்று சுழற்பந்து பந்துவீச்சாளர்களுடன் சென்றால் சிறப்பாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் எப்போதுமே சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு அதிகமாக கை கொடுக்கக்கூடிய ஒரு ஆடுகளம். அதேபோன்று ஆஸ்திரேலிய அணி வீரர்களும் சுழற்பந்து வீச்சினை எதிர்த்து விளையாடுவதில் சற்று சிரமத்தை சந்தித்துள்ளனர்.

- Advertisement -

எனவே இந்த முதலாவது போட்டிக்கான இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின் ஆகியோருடன் குல்தீப் யாதவையும் விளையாட வைக்க வேண்டும். அப்படி இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்லும் பட்சத்தில் இந்திய அணிக்கு அது சாதகமாக அமையும்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக விளையாடப்போவது யார்? – விவரம் இதோ

அதே வேளையில் ஏற்கனவே நமது அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா உள்ளதால் பும்ரா, சிராஜுடன் அவர் இணைந்து வேகப்பந்து வீச்சு துறையை கவனித்துக் கொள்வார். எனவே இந்திய அணி இந்த திட்டத்துடன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக நம்பலாம்.

Advertisement