ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக விளையாடப்போவது யார்? – விவரம் இதோ

Shubman-Gill
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தங்களது முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை நாளை அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்த ஆண்டு முற்றிலுமாக இந்தியாவில் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளதால் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று இந்திய அணி முனைப்பு காட்டும்.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியை வீழ்த்தி தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்க ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு காட்டும் என்பதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக தற்போது இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் முதல் இரண்டு போட்டிகள் வரை விளையாட முடியாமல் போக கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்றுவீரராக களம் இறங்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய அணிக்கு பேக்கப் துவக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இருக்கின்றனர். ஆனாலும் இதில் இஷான் கிஷனே ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : மழையின் சதி.. கடைசி ஓவரில் 20 ரன்கள் .. வெண்கலத்தை கூட தொட விடாத வங்கதேசம்.. பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?

ஏனெனில் இடது கை அதிரடி ஆட்டக்காரரான அவர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி இரட்டைசதம் விளாசியுள்ளார். அதன் காரணமாகவே அவர் துவக்க வீரராக களமிறங்குவார் என்று தெரிகிறது. மேலும் சமீபத்திய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement