மழையின் சதி.. கடைசி ஓவரில் 20 ரன்கள் .. வெண்கலத்தை கூட தொட விடாத வங்கதேசம்.. பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?

- Advertisement -

பதக்க போட்டியில் செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இருப்பினும் அதில் ஆரம்பத்திலேயே மழை வந்ததால் போட்டி இரு அணிகளுக்கும் தலா 13 ஓவர்களாக குறைக்கப்பட்டு துவங்கியது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு குஷ்தில் ஷா 14 (10) ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய மிர்சா பைக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 32* (18) ரன்கள் எடுத்தார். அதனால் 5 ஓவரில் பாகிஸ்தான் 48/1 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த போது வந்த மழை போட்டியை நிறுத்தியது. அத்துடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தானின் பரிதாபம்:
ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குப் பின் மழை நின்றது. அப்போது டர் ஒர்த் லெவிஸ் விதிமுறைப்படி முதல் இன்னிங்ஸ் நேரம் முடிந்து விட்டதுடன் பாகிஸ்தான் குறைந்தபட்சம் 5 ஓவர்களை முழுமையாக விளையாடி முடித்திருந்தது. அதன் காரணமாக வங்கதேசத்திற்கு 5 ஓவரில் 65 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டி மீண்டும் துவங்கியது.

அதை துரத்திய வங்கதேசத்திற்கு ஜாகிர் ஹசன் 0, கேப்டன் சைப் ஹசன் 0 ஆகிய 2 வீரர்களை முதல் ஓவரிலேயே அர்சத் இக்பால் டக் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார். அதனால் 1/2 என்ற மோசமான துவக்கத்தை பெற்று தடுமாறிய வங்கதேசத்திற்கு மறுபுறம் அதிரடி காட்டிய அபிப் ஹொசைன் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 (11) ரன்கள் குவித்து அவுட்டானார். அதனால் வெற்றியை நெருங்கிய வங்கதேசத்திற்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

சூபியன் வீசிய அந்த ஓவரில் யாசிர் அலி 6, 2, 6, 2 என அதிரடியான ரன்களை அடித்து
மொத்தம் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 (16) ரன்கள் விளாசி 5வது பந்தில் அவுட்டானார். அதனால் பரபரப்பு நிகழ்ந்த அந்த போட்டியில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது அடுத்ததாக வந்த ரகிபுல் ஹசன் பவுண்டரி அடித்ததால் 5 ஓவரில் 65/4 ரன்கள் எடுத்த வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை முத்தமிட்டது.

இதையும் படிங்க: நான் இப்போ சொல்றது இதுதான். அரையிறுதிக்கு தகுதிபெறப்போகும் 4 அணிகள் இதுதான் – சேவாக் கணிப்பு

அதன் காரணமாக அர்ஷத் இக்பால் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தும் வெண்கல பதக்கத்தை கூட தொட முடியாமல் இத்தொடரிலிருந்து பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது. குறிப்பாக மழை வராமல் போயிருந்தால் நிச்சயமாக அந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்
என்று சொல்லலாம்.

Advertisement