டி20 உலககோப்பையில் ஹார்டிக் பாண்டியாவின் இடத்திற்கு வரவுள்ள சி.எஸ்.கே வீரர் – ரோஹித் சர்மா வைத்துள்ள செக்

Rohit-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள வேளையில் அடுத்ததாக இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் அனைவரும் கவனத்தில் செலுத்தி வரும் வேளையில் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை பி.சி.சி.ஐ மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் துவக்கத்திலேயோ டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்களுக்கு தேர்வானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

தற்போதைய நிலவரப்படி இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படும் வேளையில் பந்து வீச்சாளர்களின் வரிசையில் பெரிய மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் ஜஸ்ப்ரீத் பும்ராவை தவிர்த்து மற்ற அனைவருமே ஆர்.சி.பி அணியின் பௌலிங் யூனிட்டை போன்றே இருப்பதாக பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி வரும் வேளையில் பந்துவீச்சை யூனிட்டை பலப்படுத்தும் வகையில் பவுலர்கள் தேர்வானது நடைபெறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்கப்போகும் ரோஹித் சர்மா ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்வதில் கவனமாக உள்ளார் என்றும் அதிலும் குறிப்பாக ஹார்டிக் பாண்டியா அணிக்குள் வரவேண்டும் என்றால் நிச்சயம் சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க : 5 வருஷம் கழித்து.. சேவாக்கிற்கு பின் ரிஷப் பண்ட் சாதனை.. அப்படினா 2024 டி20 உ.கோ கன்ஃபார்ம்ன்னு சொல்லுங்க

ஏனெனில் ஹர்திக் பாண்டியா தற்போது நடைபெற்ற வரும் ஐபிஎல் தொடரில் எந்த இடத்தில் பந்து வீசினாலும் ரன்களை வாரி வழங்கி வருவதால் அவரது இடம்பறி போக அதிக வாய்ப்புள்ளது. அதே வேளையில் மிடில் ஆர்டரில் அட்டகாசமான அதிரடியை வெளிப்படுத்துவதும் சிஎஸ்கே அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஷிவம் துபேவை அணிக்குள் கொண்டு வர திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement