5 வருஷம் கழித்து.. சேவாக்கிற்கு பின் ரிஷப் பண்ட் சாதனை.. அப்படினா 2024 டி20 உ.கோ கன்ஃபார்ம்ன்னு சொல்லுங்க

Rishabh Pant 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற 32வது லீக் போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் மோசமாக பேட்டிங் செய்து 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த மோசமான சாதனை படைத்த குஜராத்துக்கு அதிகபட்சமாக ரசித் கான் 31 ரன்கள் எடுத்தார்.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 90 ரன்களை சேசிங் செய்த டெல்லிக்கு ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 20, அபிஷேக் போரேல் 15, சாய் ஹோப் 19, கேப்டன் ரிஷப் பண்ட் 16* ரன்கள் அடித்து 8.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்த டெல்லி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

ஆட்டநாயகன் பண்ட்:
மறுபுறம் சந்திப் வாரியர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய குஜராத் சொந்த மண்ணில் தோற்றது. டெல்லியின் இந்த வெற்றிக்கு விக்கெட் கீப்பராக 2 கேட்ச் பிடித்து 2 ஸ்டம்ப்பிங் செய்து கேப்டனாக பவுலர்களை சரியாக பயன்படுத்தி 16* ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்து முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கார் விபத்தால் மிகப்பெரிய காயத்தை சந்தித்து அதிர்ஷ்டத்துடன் உயிர் தப்பிய அவர் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த அவர் 2023 டெஸ்ட், சாம்பியன்ஷிப், ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. இருப்பினும் கடவுளின் ஆசிர்வாதம் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனையால் மீண்டு வந்த அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்வி காணப்பட்டது.

- Advertisement -

குறிப்பாக அடிக்கடி குனிந்து எழுந்திருக்க வேண்டிய விக்கெட் கீப்பிங் வேலையை அவரால் செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று அதை பொய்யாக்கிய ரிசப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் அசத்தியத்திற்காகவே ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் ஐபிஎல் தொடரில் 2019க்குப்பின் 5 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருது வென்றுள்ள ரிஷப் பண்ட் காயங்களிலிருந்து முழுமையாக விடுபட்டு ஃபார்முக்கு வந்துள்ளார்.

இதையும் படிங்க: சாம்பியன் டீம் மாதிரி எகிறி வறோம்.. ஆரம்பத்தில் விட்ட அதையும் புடிச்சுட்டோம்.. ரிஷப் பண்ட் பேட்டி

அத்துடன் டெல்லி அணிக்காக வீரேந்திர சேவாத்திற்கு (10) பின் அதிக ஆட்டநாயகன் (7) விருதுகள் வென்ற 2வது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக அசத்தும் பட்சத்தில் 2024 டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது அதை ரிஷப் பண்ட் 99% செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement