இங்கிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா செய்துள்ள 3 மாற்றங்கள் – விவரம் இதோ

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது விசாகப்பட்டினம் நகரில் இன்று பிப்ரவரி 2-ஆம் தேதி துவங்கியது. இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

ஏனெனில் ஏற்கனவே முகமது ஷமி மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத வேளையில் காயம் காரணமாக கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக தற்போது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய இரண்டாவது போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் இந்திய அணியில் உள்ள மூன்று மாற்றங்களையும் டாசுக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா அறிவித்திருந்தார். அந்த வகையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக ரஜத் பட்டிதாருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜடேஜா அணியில் இருந்து வெளியேறிய வேளையில் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக முகேஷ் குமார் இரண்டாவது போட்டியில் விளையாடுவதாகவும் ரோஹித் சர்மா அறிவித்தார். மேலும் டாசுக்கு பிறகு பேசிய அவர் கூறுகையில் : இந்த மைதானத்தை பார்க்கும் போது முதலில் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

நாங்கள் இதற்கு முன்னதாகவே இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ளதால் நிச்சயம் ஒரு சில திட்டங்களை இந்த போட்டியில் செயல்படுத்த உள்ளோம். முதலில் பெரிய ரன்களை குவிக்கும் பட்சத்தில் நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு அது கை கொடுக்கும் என ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 125 கோடி பேரில் ஒருவராக நான் விளையாடுறது அவரோட ஆசை – சர்பராஸ் கான் நெகிழ்ச்சி

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரஜத் பட்டிதார், 6) கே.எஸ் பரத், 7) ரவிச்சந்திரன் அஷ்வின், 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகேஷ் குமார்.

Advertisement