INDvsBAN : இனி ரோஹித் விளையாட வாய்ப்பில்லை. ரசிகர்களுக்கு கிடைக்கப்போகும் ஏமாற்றம் – என்ன நடந்தது?

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று டிசம்பர் 7-ஆம் தேதி டாக்கா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தற்போது அவர்களது இன்னிங்சை விளையாடி முடித்துள்ளது. அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை குவித்தது.

Mehidy Hasan and Mahmudullah

- Advertisement -

பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக முகமதுல்லா 77 ரன்களும், மெஹதி ஹாசன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட தயாராகி வருகிறது. ஒருகட்டத்தில் வங்கதேச அணி 150 ரன்களை கூட தொடாது என்ற நிலையில் இருந்து தற்போது 270 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது ஓவரில் ஏற்பட்ட காயம் காரணமாக ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்கேன் செய்த பின்னர் தற்போது மீண்டும் கிரவுண்டுக்கு திரும்பியுள்ளார்.

Rohit-Sharma

ஆனாலும் போட்டியின் இரண்டாவது ஓவரில் வெளியேறிய ரோஹித் சர்மா பின்னர் 50 ஓவர்கள் முடியும் வரை பீல்டிங் செய்ய வராமல் வெளியில் அமர்ந்திருந்தார். இதனால் ரோஹித் சர்மா இந்த இரண்டாவது போட்டியில் பேட்டிங் செய்ய வருவது என்பது இயலாத ஒன்று என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் தற்போது பீல்டிங் செய்ய வராமல் இருக்கும் ரோஹித் ஓய்வறையில் அமர்ந்து சோகமாக இந்த கிரிக்கெட் போட்டியை கண்டு வருவதால் பேட்டிங் செய்யும் அளவிற்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்றே தெரிகிறது.

இதையும் படிங்க : அவர் மட்டும் டீமுக்கு மறுபடியும் வந்தா உங்க 2 பேர்ல ஒருத்தர் காலி ஆயிடுவீங்க – சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை

அதோடு ரத்தம் வரும் அளவிற்கு அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் நிச்சயம் அவரால் இந்த போட்டியில் பேட்டிங்கை தொடர முடியாது என்பதனால் அவர் இந்த போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் களமிறங்க மாட்டார் என்ற ஏமாற்றம் கூட ரசிகர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement