
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹார்டிக் பாண்டியாவிற்கும் அவரது மனைவி நட்டாஷாவுக்கும் விவாகரத்து நடக்க உள்ளதாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிகளவில் செய்திகள் வெளியாகி வந்தன. மேலும் விவாகரத்துக்கு பிறகு பாண்டியாவின் 70% சொத்துக்களை அவர்கள் மனைவிக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதோடு பாண்டியா ஐபிஎல் தொடர் முடிந்து தனியாக வெளிநாட்டிற்கு சென்று ஓய்வெடுத்து வருகிறார் என்ற செய்தியும் பரவியது.
2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர் தோல்விகளை சந்தித்த அந்த அணி கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. மேலும் இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவே நடந்து கொண்டனர்.
அதோடு மைதானத்திலும் பாண்டியாவிற்கு எதிராக கோஷமிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த தொடர் தோல்விகளின் எதிரொலி மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்த தனது மதிப்பும் குறைய தொடங்கவே இந்த விவாகரத்து நாடகத்தை ஹார்டிக் பாண்டியா நடத்தி வருகிறார் என்று வட இந்திய யூடியூபர் ரோகித் குப்தா என்பவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
ஹார்டிக் பாண்டியா அவரது மனைவி நட்டாஷாவால் பாதிக்கப்பட்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இரக்கத்தை பெறவே இந்த நாடகம் நடைபெற்று வருகிறது. எல்லாமே ஒரு விளம்பர யுக்தி என்று குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது போன்றே இந்த விவகாரத்து நாடகமானது மும்பை இந்தியன்ஸ் அணி தோல்விக்கு பிறகே ஆரம்பித்தது.
அதோடு பாண்டியாவிற்கும் நட்டாஷாவிற்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அதன் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் முதலில் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஜிம் பயிற்சியாளருடன் உணவருந்த சென்ற நட்டாஷாவை அவரது ஆண் நண்பருடன் வெளியே வந்திருக்கிறார் என்றும் காண்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க : இதுவே போதும்.. மெஸி, ரொனால்டோவுக்கு அப்றம் கிங் விராட் கோலி தான்.. ராஸ் டெய்லர் பாராட்டு
அதனை தொடர்ந்து ஹார்டிக் பாண்டியாவின் குழந்தை அகஸ்தியாவை க்ருனால் பாண்டியா வீட்டில் வைத்திருப்பது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இப்படி தினசரி ஒவ்வொரு விஷயத்தின் மூலமும் ஒரு தகவலை பகிர்ந்து தன் மீது இரக்கம் கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காகவே பாண்டியா இந்த நாடகத்தை நடத்திய உள்ளாரோ என்று தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.