இதுவே போதும்.. மெஸி, ரொனால்டோவுக்கு அப்றம் கிங் விராட் கோலி தான்.. ராஸ் டெய்லர் பாராட்டு

Ross Taylor
- Advertisement -

இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் உச்சபட்ச நட்சத்திர வீரராக அறியப்படுகிறார். கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தத் துவங்கிய அவர் கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தனி ஒருவனாக தோற்கடித்த அவர் இதுவரை 26,000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 பேட்டிங் சராசரியை கொண்டிருப்பதே அவரின் தனித்துவமாகும். அத்துடன் ஐபிஎல் தொடரிலும் 8000+ ரன்கள் குவித்து அதிக சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ள அவர் 35 வயதிலேயே ஜாம்பவானுக்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

சூப்பர்ஸ்டார் கிங் கோலி:
அப்படி ஆல் ஏரியாவிலும் கில்லியாக சொல்லி அடித்து வருவதாலேயே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரராக விராட் கோலி சாதனை படைத்திருந்தார். சொல்லப்போனால் ரொனால்டோ, மெஸ்ஸி ஆகிய கால்பந்து ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட 3வது விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

இந்நிலையில் ரொனால்டோ, மெஸ்ஸி போல விராட் கோலி விளையாட்டு உலகின் சூப்பர்ஸ்டார் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “வீரர்கள் பல்வேறு பொருட்களை தங்களுடைய சமூக வலைதளத்தில் இப்படி விளம்பரம் செய்வார்கள் என்று யார் 2008இல் நினைத்திருப்பார்கள்? விராட் கோலி போன்றவர் உலக கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்”

- Advertisement -

“அவர் உலக அளவில் விளையாட்டு துறையின் ஒரு சூப்பர்ஸ்டார். இன்ஸ்டாகிராம் மற்றும் இதர சமூக வலைதளங்களில் அவர் ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருடன் இருக்கிறார். இப்போதெல்லாம் விளையாட்டு வீரர்கள் அதிகமாக விமர்சிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சினிமா நட்சத்திரங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் போன்ற பலரும் சமூக வலைதளத்தின் கீழ் இருக்கின்றனர்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் மாதிரி பவரான லைன்-அப் யார்கிட்டயும் இல்ல.. இந்தியா போன்ற எதிரணிகளை எச்சரித்த ஷாஹித் அப்ரிடி

“இது ஒரு மோசமான விஷயம் என்று நான் நினைக்கவில்லை” எனக் கூறினார். அப்படி சூப்பர் ஸ்டாராக இருப்பதாலேயே அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் முகத்தை ஐசிசி விளம்பரத்திற்கு பயன்படுத்தி வருகிறது. அந்தளவுக்கு விராட் கோலி தன்னுடைய திறமை மற்றும் உழைப்பால் உயர்ந்து இன்று உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் மிகையாகாது.

Advertisement