ஆசியக்கோப்பை : ப்ரஸ்மீட்டில் வம்பிழுத்த பாக் பத்திரிகையாளர் – தரமான பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா

Rohith-2
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் பங்கேற்றுள்ள ஆசியக்கோப்பை தொடரானது நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் கோலாலமாக துவங்கி நடைபெற்றது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய வேளையில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணியானது தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

INDvsPAK

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொண்டார். அந்த சந்திப்பின்போது ரோகித் சர்மாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

அந்த கேள்விகளுக்கு மிகவும் சாமர்த்தியமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் பதில் அளித்தார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் : கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் மோதியபோது இந்திய அணியின் நிலைமை என்ன ஆனது? என்பது உங்களுக்கு தெரியும். அந்த தோல்வியின் தாக்கம் இன்னும் இருக்கிறதா? அதிலிருந்து மீண்டு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

Rohith

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : இங்கு பாருங்கள் எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த எந்த விஷயங்களையும் என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. எனவே தற்போது வேறு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று கூறினார். அவரின் இந்த பதிலை கேட்டு அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. அதோடு அந்த பத்திரிக்கையாளர் நிறுத்திக் கொள்ளவில்லை மேலும் தொடர்ந்த அவர் :

- Advertisement -

கடந்த சில தொடர்களாகவே இந்திய அணி புதுப்புது துவக்க ஜோடியை முயற்சித்து வருகிறது. ஏனென்றால் அப்போது ராகுல் அணியில் இல்லை. ஆனால் தற்போது ராகுல் வந்துவிட்டதால் நேரடியாக அவர் அணியில் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா கூறுகையில் : டாஸ் போட்ட பிறகு அது உங்களுக்கே தெரிய வரும். அந்த ரகசியத்தை அதுவரை பாதுகாக்க விடுங்கள்.

இதையும் படிங்க : சச்சின் மட்டுமல்ல கும்ப்ளே, வார்னே, முரளிதரன் என அனைவரது சாதனைகளைக்கும் ஆபத்து – ஜேம்ஸ் ஆண்டர்சன் கலக்கல்

வித்தியாசமாக முயற்சிப்பது தான் எங்களின் நோக்கம். நாங்கள் இன்னும் அணியை முடிவு செய்யவே இல்லை. புதிய காம்பினேஷன்களை முயற்சி செய்தால் தான் அதன் பலன்களை தெரிந்து கொள்ள முடியும் எனவும் அதுவரை காத்திருங்கள் எனவும் ரோகித் சர்மா பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement