சச்சின் மட்டுமல்ல கும்ப்ளே, வார்னே, முரளிதரன் என அனைவரது சாதனைகளைக்கும் ஆபத்து – ஜேம்ஸ் ஆண்டர்சன் கலக்கல்

Anderson
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று மான்செஸ்டரில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்று தைரியமாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த தென் ஆப்பிரிக்காவை அற்புதமாக பந்துவீசி மடக்கிய இங்கிலாந்து வெறும் 151 ரன்களுக்கு சுருட்டியது. டீன் எல்கர் 12, பீட்டர்சன் 21, டுஷன் 16 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிக பட்சமாக ககிசோ ரபடா 36 ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு அட்டகாசமாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சீனியர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இங்கிலாந்து மாஸ்:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு லீஸ் 4, போப் 23, ஜோ ரூட் 9, ஜாக் கிராவ்லி 38, ஜானி பேர்ஸ்டோ 49 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் மிடில் ஆர்டரில் 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு தூக்கி நிறுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதமடித்து 103 ரன்களும் அவருடன் கடைசி வரை அவுட்டாகாமல் பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 113* ரன்களும் குவித்தனர். அதனால் 415/9 ரன்கள் எடுத்திருந்த போது தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக இங்கிலாந்து அறிவித்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதன்பின் 264 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா மீண்டும் இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் வெறும் 179 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பீட்டர்சன் 42 ரன்களும், டுஷன் 41 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்ற இங்கிலாந்து முதல் போட்டியில் படுதோல்வியை பரிசளித்த தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை 1 – 1* (3) என சமன் செய்து சொந்த மண்ணில் ராஜா என மீண்டும் நிரூபித்துள்ளது.

ஆண்டர்சன் உலகசாதனை:
இந்த வெற்றிக்கு 103 ரன்களும் 4 விக்கெட்டுகளும் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 6 விக்கெட்டுகளை எடுத்த சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். குறிப்பாக தென் ஆப்பிரிக்க பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் கேப்டன் டீன் எல்கரை 2வது இன்னிங்சில் கிளீன் போல்டாக்கிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத்தை முந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக அவரது சாதனையை முறியடித்துள்ள இவர் 664, 269, 18 என டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து இங்கிலாந்துக்காக மொத்தம் 951* விக்கெட்களை எடுத்துள்ளார். இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக 949 விக்கெட்களை (563+381+5) எடுத்துள்ள ஜாம்பவான் கிளென் மெக்ராத்தை தற்போது 2வது இடத்திற்கு தள்ளியுள்ள அவர் இந்த புதிய உலக சாதனை படைத்துள்ளார். 916 விக்கெட்களுடன் 3வது இடத்தில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் உள்ளார்.

ஆபத்தில் சச்சின், வார்னே:
பொதுவாக கிரிக்கெட்டில் 35 வயதை கடந்துவிட்டால் சோர்வடைந்து ஓய்வடையும் பெரும்பாலான வீரர்களுக்கு மத்தியில் பழைய சரக்கை போல் 35 வயதுக்கு பின் முன்பை விட இருமடங்கு அபாரமாக செயல்படும் இவர் 40 வயதில் இப்படி அசால்ட்டான உலக சாதனைகளை படைத்து வருகிறார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற உலக சாதனையையும் இந்த போட்டியில் படைத்த அவர் இதுவரை மொத்தமாக 174 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

1. மேலும் 50 வயது வரை விளையாட முயற்சிப்பேன் என்று ஏற்கனவே தெரிவித்துள்ள அவர் இன்னும் ஒருசில வருடங்களில் மேற்கொண்டு 27 போட்டிகளில் விளையாடினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சினின் ஆல் டைம் சாதனையை (200 போட்டிகள்) முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

2. அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3வது பவுலர் என்ற பெருமையுடன் திகழும் இந்தியாவின் கும்ப்ளேவின் சாதனையையும் (956) தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை எடுத்து உடைக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

3. மேலும் இன்னும் சில வருடங்கள் விளையாடினால் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலராக திகழும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னேவையும் (1001 விக்கெட்கள்) முந்த இவருக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : SLvsAFG : முதல் போட்டியிலேயே வேலையை ஆரம்பித்த அம்பயர்கள், கொந்தளிக்கும் இலங்கை ரசிகர்கள் – என்ன நடந்தது?

4. ஒருவேளை வார்னேவை முந்தினால் நிச்சயமாக சச்சினின் 200வது டெஸ்ட் சாதனைகளையும் ஒட்டுமொத்தமாக 1347 விக்கெட்களுடன் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் சாதனையையும் உடைப்பதற்கும் இவருக்கு வாய்ப்புள்ளது.

Advertisement