SLvsAFG : முதல் போட்டியிலேயே வேலையை ஆரம்பித்த அம்பயர்கள், கொந்தளிக்கும் இலங்கை ரசிகர்கள் – என்ன நடந்தது?

- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 2022 தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இந்த தொடர் விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக நடப்புச் சாம்பியன் இந்தியா உட்பட ஆசியாவின் டாப் 6 அணிகள் மோதும் நிலையில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்றைய துவக்க போட்டியில் மோதின. துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பரூக்கி வீசிய முதல் ஓவரின் கடைசி 2 பந்துகளில் குசால் மெண்டிஸ் 2 (4), அஸலங்கா 0 (1) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

போதாகுறைக்கு அடுத்த ஓவரிலேயே நிஷாங்காவும் 3 (7) ரன்களில் அவுட்டானதால் 5/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இலங்கை ஆரம்பத்திலேயே திணறியது. அந்த நிலைமையில் மிடில் ஆர்டரில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடி காட்டிய ராஜபக்சா 38 (29) ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். அதனால் மேலும் சரிந்த அந்த அணிக்கு இறுதிவரை போராடிய கருணாரத்னே 31 (38) ரன்கள் எடுத்தாலும் இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 19.4 ஓவரில் வெறும் 105 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டானது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அதிரடி:
அந்தளவுக்கு அசத்தலாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பரூக்கி 3 விக்கெட்டுகளையும் முஜிப் உர் ரகுமான் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 106 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சுமாராக பந்து வீசிய இலங்கை பவுலர்களை சரமாரியாக அடித்த தொடக்க வீரர்கள் ரஹ்மதுல்லா குர்பாஸ் மற்றும் ஹசரத்துல்லா ஆகியோர் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தனர்.

அதில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 40 (18) ரன்களை 222.22 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்கவிட்டு குர்பாஸ் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜாட்ரான் 15 (13) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37* (28) ரன்கள் எடுத்த ஹசரதுல்லா 10.1 ஓவரில் 106/2 ரன்களை எடுக்க வைத்து தனது அணிக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இந்த அதிரடியான வெற்றியால் குரூப் பி பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள ஆப்கானிஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கிய அசத்தியுள்ளது.

- Advertisement -

வேலைகள் ஆரம்பம்:
இந்த வெற்றி 3 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். முன்னதாக இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை 3/2 என தடுமாறிய போது நவீன்-உல்-ஹக் வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட மற்றொரு தொடக்க வீரர் பதும் நிசாங்கா எட்ஜ் வாங்கியதாக ஆப்கானிஸ்தான் அவுட் கேட்டது. குறிப்பாக அதை வீசிய பவுலர் கண்டிப்பாக அவுட்தான் என்று ஆழமாக அம்பயரிடம் கோரிக்கை வைத்தார்.

அதனால் களத்தில் இருந்த அம்பயர் அனிருத் சவுத்ரி அவுட் கொடுத்ததால் அதிர்ச்சியடைந்த நிஷாங்கா தாம் எட்ஜ் கொடுக்கவில்லை என்பதால் ரிவ்யூ எடுத்தார். அதை 3-வது நடுவர் சோதித்து பார்த்ததில் பேட்டுக்கும் பந்துக்கும் நல்ல இடைவெளி இருந்ததுடன் அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் எந்த ஸ்பைக்க்கும் காட்டவில்லை.

- Advertisement -

அதன் காரணமாக தாம் அவுட் இல்லை என நிம்மதியடைந்த அவர் 3வது நடுவர் ஜெயராமன் மதன்கோபால் சம்பந்தமே இல்லாமல் அவுட் கொடுத்ததால் அதிர்ச்சியடைந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். அதை பார்த்த இலங்கை பயிற்சியாளர்களும் வீரர்களும் கேப்டனும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் அல்ட்ரா எட்ஜ் கருவியில் எந்த ஸ்பைக்கும் தெரியாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டு செயல்படும் வகையில் நடந்து கொண்ட அம்பயரை சமூக வலைதளங்களில் நிறைய இலங்கை ரசிகர்கள் கடுமையாக திட்டி தீர்க்கிறர்கள்.

ஒருவேளை அந்த முடிவு சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் இலங்கை மேலும் ரன்களை குவித்து வெற்றிக்கு போராடியிருக்கும். மேலும் 7வது ஓவரின் கடைசி பந்தில் ஒய்ட் கொடுத்த நடுவர் அதை வீசிய முகமது நபி அவுட் கேட்டதால் கொடுத்த முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க : எங்க வந்து யாருகிட்ட, மிரட்டிய தெ. ஆவை சொந்த மண்ணில் துவைத்த இங்கிலாந்து மாஸ் கம்பேக் வெற்றி – முழுவிவரம்

அதனால் 50 ரன்களை தொட்ட இலங்கை 49 ரன்களுக்கு வந்தது. இப்படி முதல் போட்டியிலேயே குளறுபடியான அம்பயரிங் செய்த நடுவர்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். இந்த போட்டியிலேயே இப்படி என்றால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் என்ன நடக்கப்போகிறதோ என்றும் ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement