டி20 தொடரின் கோப்பையை வென்றதும் ரோஹித் கொண்டு போய் கொடுத்த இந்த நபர் யார் தெரியுமா? – விவரம் இதோ

Jaydev
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி டி20 உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியை கையில் எடுத்த ரோஹித் சர்மா இந்திய மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தற்போது அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை தொடர் என 3 தொடர்களிலும் மூன்று அணியையும் ஒயிட்வாஷ் செய்து தொடர்ச்சியாக 9 வெற்றிகளை குவித்து வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார்.

IND-1

- Advertisement -

இந்திய அணியில் எப்போதுமே ஒரு தொடரின் கோப்பையை கைப்பற்றும் போது அணியில் யாரேனும் இளம் வீரர் அறிமுகமாகி இருந்தால் அவர்களின் கையில் கொடுத்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் பல முறை இளம் வீரர்கள் கோப்பையை ஏந்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது மட்டுமின்றி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதையும் நாம் பார்த்திருக்க முடியும்.

இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் வெற்றிக்கு பிறகு ஆவேஷ் கான் வெற்றி கொண்டாட்டத்தில் கோப்பையை வைத்து ஈடுபட்டாலும் அதன் பின்னர் அந்த கோப்பையை வாங்கி சென்ற ரோஹித் புதிதாக ஒரு நபரிடம் கொடுத்து அந்த வெற்றியை கொண்டாடிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கோப்பையை கொடுத்த அந்த குறிப்பிட்ட நபர் யார் என்ற தேடலும் அதிக அளவில் இருந்து வருகிறது.

Jaydev-shah

இந்நிலையில் அதற்கான தெளிவான விளக்கத்தை தான் நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இலங்கை அணிக்கு எதிரான இந்த டி20 தொடரை வென்று கோப்பையை கைப்பற்றி வெற்றியை கொண்டாடிய பிறகு நேராக அந்த கோப்பையை கொண்டு சென்று ஜெய்தேவ் ஷா என்ற இந்த நபரிடம் ரோஹித் கொடுத்தார். இதற்கு காரணம் யாதெனில் தற்போது இந்திய அணியில் டீம் மேனேஜராக இருந்து வரும் இவர் அண்மையில் இந்திய அணியுடன் இணைந்ததால் அவரிடம் கோப்பையை கொடுத்து ரோகித்சர்மா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி யார் இந்த ஜெய்தேவ் ஷா என்று நாம் தேடுகையில் : இந்த ஜெய்ஷா ஏற்கனவே பிசிசிஐயின் செகரட்டரியாக இருந்த நிரஞ்சன் ஷாவின் மகன் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்திய அணிக்காக இவர் விளையாடவில்லை என்றாலும் சௌராஷ்டிரா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய அனுபவம் உடையவர். ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 2002ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ள அவர் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 5000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார்.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் காலியாக உள்ள 2 இடத்திற்கு – 3 பேர் போட்டி – வாய்ப்பு யாருக்கு?

அதுமட்டுமின்றி 10 சதம் மற்றும் 20 அரை சதம் அடித்த ஒரு திறமை வாய்ந்த வீரர் என்று தெரியவந்துள்ளது. கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது இந்திய அணியுடன் மேனேஜராக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்து இந்திய அணியுடன் இணைந்துள்ளதால் அவரின் வருகைக்காக ரோஹித் கோப்பையை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Advertisement