IND vs SL : இலங்கைக்கு எதிரான 2 ஆவது போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஏன் ஆடவில்லை – ரோஹித் சர்மா பதில்

Yuzvendra Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsSL

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இலங்கை அணியும் விளையாடி வருவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அணியில் ஒரே ஒரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Chahal

அதன்படி இன்று நடைபெற்று வரும் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 39.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் விளையாடாதது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாசின் போதே தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்.

இதையும் படிங்க : வீடியோ : நேரலையில் மோசமான கெட்ட வார்த்தையால் சத்தமாக சக வீரரை திட்டிய பாண்டியா – ரசிகர்கள் கோபம்

அதன்படி கடந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது கேட்ச் பிடிக்க டைவ் அடித்த யுஸ்வேந்திர சாஹல் இரண்டாவது போட்டிக்கு முன்னர் வரை அந்த டைவால் ஏற்பட்ட காயத்திலிருந்து மீளவில்லை. இதன் காரணமாகவே அவர் இந்த இரண்டாவது போட்டியை தவற விட்டுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இந்த போட்டியில் விளையாடுகிறார் என்றும் ரோகித் சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement