நேரலையில் வார்த்தை விட்டு சக வீரரை திட்டிய பாண்டியா – ரசிகர்கள் கோபம்

Hardik Pandya 1
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தாலும் 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் அவிஷ்கா பெர்னாண்டோ 20, நுவனிடு பெர்னாண்டோ 50, குசால் மெண்டிஸ் 34 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்து அவுட்டானார்கள்.

ஆனால் மிடில் ஆர்டரில் டீ சில்வா 0, அசலங்கா 15, கேப்டன் சனாகா 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கடைசியில் ஹஸரங்கா 21, வெல்லலகே 32 போன்ற டெயில் எண்டர்கள் ஓரளவு கணிசமான ரன்களை அடித்து மானத்தை காப்பாற்றினர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 216 ரன்களை இந்தியா துரத்தி வருகிறது.

- Advertisement -

மோசமான கெட்ட வார்த்தை:
முன்னதாக இப்போட்டியில் ஒரு முக்கிய தருணத்தில் நட்சத்திர இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா ஒட்டுமொத்த மைதானத்திற்கே கேட்கும் அளவுக்கு சத்தமாக சக வீரரை மோசமான கெட்ட வார்த்தையில் திட்டினார். ஆம் பரபரப்பாக துவங்கிய இப்போட்டியில் 11 ஓவர்களில் இலங்கை 58/1 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது ஓவர் மாற்றும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது அதற்கு முந்தைய ஓவரிலேயே தாகமாக இருந்ததால் தண்ணீர் கொண்டு வருமாறு கூல்டிரிங்ஸ் தூக்கும் இந்திய சப்ஸ்டியூட் பீல்டர்களிடம் ஹர்திக் பாண்டியா சொல்லியதாக தெரிகிறது.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இந்தியா சப்ஸ்டியூட் பீல்டர்கள் தண்ணீர் கொண்டு வரவில்லை. இருப்பினும் அதற்காக காத்திருந்து அடுத்த ஓவரே முடிந்து விட்டதால் கோபமடைந்த ஹர்திக் பாண்டியா “கடந்த ஓவரின் போதே தண்ணீர் கேட்டிருந்தேன். அதைக் கொண்டு வராமல் அங்கே என்ன சூ**டி*க்கிட்டு இருந்தீங்களா” என்று இந்தியில் 50,000+ ரசிகர்கள் அமர்ந்திருந்த ஒட்டுமொத்த ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கே கேட்கும் அளவுக்கு மிகுந்த வேகத்துடன் சத்தமாக திட்டினார். அதை கேட்டு அதிருப்தியடைந்த ரசிகர்கள் அப்படியே படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சக வீரர்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வதா என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டிலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அடுத்த கேப்டனாக வரப்போகும் இவர் இந்த சாதாரண விஷயத்துக்கே அணி வீரர்களிடம் இப்படி கோபத்தை வெளிப்படுத்தினால் கேட்ச் விடுவது, நோ-பால் போடுவது என வெற்றியை எதிரணிக்கு பரிசளிக்கும் தவறுகளை இளம் வீரர்களை செய்யும் போது எந்த அளவுக்கு கோபமடைவார் என்று ரசிகர்கள் அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

அதிலும் நேரலையிலேயே அவ்வளவு ரசிகர்கள் அமர்ந்திருக்கும் மைதானத்தில் இவ்வளவு மோசமாக திட்டும் இவர் யாரும் அறியாத உடைமாற்றும் அறையில் வீரர்களிடம் கோபமாக இருந்தால் எவ்வளவு மோசமாக பேசி எப்படி நடந்து கொள்வார் என்பதை நினைத்தாலே ஏமாற்றமளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: திறமை இருந்தும் ஏன் இப்டி பண்றிங்க? உங்களை அவங்க தான் காப்பாத்தணும் – கேஎல் ராகுலுக்கு அசாருதீன் அட்வைஸ்

குறிப்பாக எதிரணியை இப்படி திட்டினால் கூட பரவாயில்லை சொந்த அணி வீரர்களையே இப்படி திட்டினால் என்னாவது என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே கேப்டனாக வளர்ந்து விட்டால் மட்டும் போதாது முதலில் சக அணி வீரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி போன்ற ஜாம்பவான்களிடம் கற்றுக் கொள்மாறு பாண்டியாவை கடுமையாக சாடுகிறார்கள்.

Advertisement